ஹோம் /திருச்சி /

பயணிகள் கவனத்திற்கு... திருச்சிக்கு வரும் இந்த ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது

பயணிகள் கவனத்திற்கு... திருச்சிக்கு வரும் இந்த ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது

ரயில் நேரம் மாற்றம்

ரயில் நேரம் மாற்றம்

Trichy District | திருச்சிக்கு வரும் இந்த ரயில்களுக்கு நேரம் மாற்றம் செய்யப்படுள்ளதாக திருச்சி ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சிக்கு வரும் சில ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்படுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்சி கோட்ட ரயில்வே முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளதாவது:

திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில்கள் (வண்டி எண்கள்: 16233, 16234) தஞ்சை-திருச்சி முன்பதிவில்லாத சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் (வண்டி எண்: 06869) நேரமும் நாளை முதல் மாற்றம் செய்யப்படுகிறது.

இதில், மயிலாடுதுறை-திருச்சி வரும் ரயில் (வண்டி எண்:16233) தினமும் மயிலாடுதுறையில் இருந்து காலை 8.35 மணிக்கு பதிலாக 8.15 மணிக்கு புறப்படும். அதுபோல் அந்த ரயில் காலை 11.05 மணிக்கு பதிலாக 10.40 மணிக்கு திருச்சியை வந்தடையும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

திருச்சியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரயில் (வண்டி எண்:16234) தினமும் திருச்சியில் இருந்து பிற்பகல் 1.05 மணிக்கு பதிலாக பிற்பகல் 12.50 மணிக்கு புறப்படும். அதுபோல் மாலை 3.45 மணிக்கு பதிலாக 3.20 மணிக்கே மயிலாடுதுறையை சென்றடையும்.

Must Read : த்ரில் அனுபவம்... சில்லென்று கொட்டும் அருவி - குளித்து மகிழ கோவை குற்றாலம் வாங்க!

மேலும், தஞ்சாவூரில் இருந்து திருச்சிக்கு வரும் ரயில் (வண்டி எண்: 06869) தினமும் காலை 6.45 மணிக்கு பதிலாக காலை 6.30 மணிக்கு புறப்படும். அதுபோல் காலை 8.15 மணிக்கு பதிலாக 8 மணிக்கே திருச்சியை வந்தடையும் என்று தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Train, Trichy