திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் 46 பொது கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் குடியிருப்பு பகுதிகளில் 368 சமுதாய கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சமுதாய கழிப்பிடங்களை பராமரிக்கும் பொறுப்பை கிராமாலயா, மகளிர் சுய உதவிக் குழு, மற்றும் தனியார் தொண்டு அமைப்பினரிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் பொது சுகாதாரத் துறையினர், பொது கழிப்பிடம் மற்றும் சமுதாய கழிப்பிடத்தின் முகப்பு பகுதிகளில் சுவரொட்டியில் க்யூ ஆர் கோடு வசதியை ஏற்படுத்தி உள்ளனர்.
இந்த க்யூ ஆர் கோடு மூலம் பொதுமக்கள், தாங்கள் பயன்படுத்தும் கழிப்பிடத்தில் உள்ள குறைகள் புகார்களைதெரிவிக்க முடியும்.
பொதுமக்கள் தங்கள் செல்போனில் இந்த க்யூ ஆர் கோடு மூலம் புகார் அளிக்கும் போது அதில் 1- கழிப்பறை சுத்தமாகவும், பயன்படுத்தும் நிலையில் உள்ளதா?, 2- கை கழுவும் இடம் சுத்தமாகவும் பயன்படுத்தும் நிலையில் உள்ளதா?, 3- தண்ணீர் வசதி உள்ளதா?, 4- போதுமான காற்றோட்ட வசதி உள்ளதா?, 5- கழிப்பறையின் உள்ளேயும், வெளியேயும் போதுமான வெளிச்சம் உள்ளதா?, 6- கழிப்பறை கதவுகளில் தாழ்ப்பாள் சரியான முறையில் பொருத்தப்பட்டுள்ளதா?, 7- கழிப்பறையில் துர்நாற்றம் உள்ளதா?, என்பது போன்ற 7 கேள்விகள் கேட்கப்படும்.
இதில் எந்த குறை உள்ளது என்பதை பொதுமக்கள் தேர்வு செய்து அனுப்ப வேண்டும். இதை மாநகராட்சியில் உள்ள தொழில்நுட்ப பிரிவினர் பொது சுகாதார அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
பொது சுகாதாரத் துறையினர் இந்த புகாரை மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பி வைக்கின்றனர். உடனடியாக கமிஷனர் உத்தரவின் பேரில் புகார் பெறப்பட்ட கழிப்பறைக்கு செல்லும் சுகாதார பணியாளர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த நவீன கியூ ஆர் கோடு திட்டம் பொதுமக்களின் வரவேற்பைபெற்றுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Toilet, Toilet Clean, Trichy