முகப்பு /திருச்சி /

திருச்சியில் தொடர் மழை.. வாகன ஓட்டிகள் கடும் அவதி!

திருச்சியில் தொடர் மழை.. வாகன ஓட்டிகள் கடும் அவதி!

X
கனமழை

கனமழை

Trichy rain | காலை முதலே பெய்து வரும் மழையால் வேலைக்கு செல்வோர், பள்ளிக்கு செல்வோர் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

தமிழகத்தின் 29 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை, ஓரிரு இடங்களில் மிதமான மற்றும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி திருச்சி மாநகரில் காலையிலிருந்து குளிர்ந்த காற்றுடன் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், திருச்சி மாநகரப் பகுதியில் சத்திரம் பஸ் ஸ்டாண்ட், மலைக்கோட்டை, மரக்கடை, ஜங்ஷன், தில்லைநகர், உறையூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

ALSO READ | திருச்சி மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை - இதில் உங்கள் ஏரியா இருக்கா?

இதனால், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் திடீர் கனமழையால் பெரும் அவதிக்கு ஆளாகினர் . குறிப்பாக இரு சக்கர வாகன் ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

First published:

Tags: Heavy rain, Local News, Trichy