முகப்பு /திருச்சி /

தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளை முற்றுகையிடும் போராட்டம்

தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளை முற்றுகையிடும் போராட்டம்

X
மாதிரி

மாதிரி படம்

Tamil Nadu Sand Truck Owners Protection Association | மணல் விலை யூனிட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் விற்கப்படும் என கூறிய நிலையில் தற்போது ஒரு யூனிட் ரூ.4000 விற்கப்படுவதாக குற்றச்சாட்டு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என   தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தென் சென்னை மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில்  நடைபெற்றது.  மாநில தலைவர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தென்சென்னை மணல் லாரி உரிமையாளர் நலச்சங்கதலைவர் மயிலை செல்வம், துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி,பெரம்பலூர் மாவட்ட தலைவர் அன்பு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய மாநில தலைவர் ராஜசேகர் தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் இணையதளம் மூலம் மணல் விற்பனை செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். ஆற்றுப்படுகையில் மணல் விலை யூனிட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் விற்கப்படும் என கூறிய நிலையில் தற்போது ஒரு யூனிட் 4000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த விற்பனை அரசுக்கு தெரிந்து நடக்கிறதா என்று எங்களுக்கு தெரியவில்லை.தற்போது ஒரு லாரிக்கு நான்கு யூனிட் மணல் ரூ. 16,000 க்கு குத்தகைக்காரர்கள் மூலம் வசூலிக்கப்படுகிறது.இந்த கடும் விலையால் மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் குடும்பத்தினர் வாழ்வாதாரம் இழந்து கடுமையான சூழ்நிலையில் இருந்து வருவதாக கூறினார்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும்,குவாரி குத்தகைக்காரர்களிடம் பேசியும் எந்தவொரு நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. எனவே, இதனை கண்டித்து விரைவில் அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து அனைத்து மணல் குவாரிகளை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம் என  ராஜசேகர் தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Trichy