ஹோம் /திருச்சி /

பொங்கல் முடிந்து ஒரு வாரமாகியும் திறக்கப்படாத குவாரிகள்... திருச்சி மாட்டு வண்டி உரிமையாளர் சங்கத்தினர் எடுத்த முடிவு...

பொங்கல் முடிந்து ஒரு வாரமாகியும் திறக்கப்படாத குவாரிகள்... திருச்சி மாட்டு வண்டி உரிமையாளர் சங்கத்தினர் எடுத்த முடிவு...

X
திருச்சி

திருச்சி

Trichy News : திருச்சியில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மணல் மாட்டு வண்டி உரிமையாளர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டத்தில் சுமார் 2400 மாட்டு வண்டி தொழிலாளர்கள் மாட்டு வண்டியை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். தற்போது செயல்பட்டு கொண்டிருந்த மாதவப் பெருமாள் கோவில், மான்படிமங்கலம் தாளக்குடி, ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த மணல் மாட்டு வண்டி குவாரிகள் பொங்கலுக்கு முன் மூடப்பட்டது. பொங்கல் முடிந்ததும் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் பொங்கல் முடிந்து ஒரு வார காலம் ஆகியும் இன்னும் மணல் குவாரிகள் திறக்கப்படவில்லை.

இந்நிலையில், இதனால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரமே இந்த மாட்டு வண்டி தான். தற்போது 5 நாட்களுக்கு மேலாக குவாரிகள் திறக்கப்படாததால் தங்களது மாடுகளுக்கு தீவனம் கூட வாங்கிப்போட முடியவில்லை என கூறி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

First published:

Tags: Local News, Trichy