திருச்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து காவல் மாவட்டங்கள் மற்றும் திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்களின் வாரிசுகள், அமைச்சு பணியாளர்களின் வாரிசுகளுக்காக இன்று (25ம் தேதி) திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
தற்போது சீருடைப்பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்றவர்களின் குழந்தைகள் மற்றும் வாரிசுகள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். விருப்பம் உள்ளவர்கள் 94981 65533, 93454 23925, 94430 94489 ஆகிய செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளவேண்டும். இந்த தகவலை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jobs, Local News, Trichy