108 வைணவ தளங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
பெருமாளின் 108 திவ்ய தேசங்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்பட்டாலும் இவற்றில் முதன்மையாக போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவே சிறப்பு வாய்ந்ததாகும். இதற்கு காரணம் ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கன் தனது பக்தரான நம்மாழ்வாருக்கு மோட்சத்தை அளித்த வரலாறு இந்த திவ்ய தேசத்துக்கு தான் உண்டு.
இத்தகையை சிறப்பு மிக்க வைகுண்ட ஏகாதசி விழா ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல்பத்து, ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும். இந்த நாட்களில் பெரிய பெருமாள் எனப்படும் மூலவர் ரெங்கநாதர் முத்தங்கியுடன் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
மேலும் படிக்க : பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் திருச்சி குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாசலபதி கோயிலின் சிறப்புகள்
பகல் பத்து உற்சவத்தின் போது உற்சவர் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலும், ராப்பத்து உற்சவத்தின் போது திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திலும் அனைத்து ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியார்களுடன் எழுந்தருளுவார். இதில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா இந்த ஆண்டு வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. சொர்க்கவாசல் திறப்பையொட்டி கோவிலில் பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy