ஹோம் /திருச்சி /

திருச்சி மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மின் தடை

திருச்சி மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மின் தடை

மின்தடை அறிவிப்பு

மின்தடை அறிவிப்பு

Trichy Power Cut | திருச்சி மாவட்டம் சிறுகனூர் துணை மின் நிலையம், தங்கநகர் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட சிறுகனூர் துணை மின் நிலையத்தில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை (அக்டோபர் 29ம் தேதி) மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், நாளை பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : காந்தளூர் அருவி முதல் அமராவதி அணை வரை.. உடுமலையை சுற்றி மட்டும் இத்தனை சுற்றுலா தலங்களா?

ஆவாரவள்ளி, சிறுகனூர், திருப்பட்டூர், சி.ஆர்.பாளையம், எம்.ஆர்.பாளையம், சனமங்கலம், மணியாங்குறிச்சி, வாழையூர், நெடுங்கூர், நெய்குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூர், பி.கே.அகரம் ரெட்டிமாங்குடி, ஜி.கே.பார்க், கூத்தனூர், ஸ்ரீதேவிமங்கலம், கொளக்குடி மற்றும் கண்ணாக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இதேபோல் உப்பிலியபுரம் பகுதியில் உள்ள தங்கநகர் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி துணை மின் நிலையங்களில், நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஆகையால், எஸ்.என்.புதூர், எ.பாதர்பேட்டை, ஆர்.கோம்பை, பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி, ஆங்கியம், சாலக்காடு, கவுண்டம்பாளையம், கீழப்பட்டி, வடக்குப்பட்டி, கோட்டப்பாளையம், வெங்கட்டம்மாள் சமுத்திரம், பி.மேட்டூர், கே.புதூர், மாராடி, வேலம்பட்டி, கோனேரிப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, கருப்பம்பட்டி, சீத்தக்காடு, ரெட்டியாப்பட்டி, கல்லாங்குத்து, சின்ன கல்லாங்குத்து, நெட்டவேலம்பட்டி, பச்சபெருமாள்பட்டி, வைரபெருமாள்பட்டி, செங்கல்பட்டி, அரப்பளிப்பட்டி, மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் தடை செய்யப்படும் என துறையூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Trichy