ஹோம் /திருச்சி /

திருச்சியில் நாளைய (18.10.22) மின்தடை பகுதிகள்

திருச்சியில் நாளைய (18.10.22) மின்தடை பகுதிகள்

திருச்சியில் மின்தடை

திருச்சியில் மின்தடை

Trichy Power cut: திருச்சியில் நாளை (செவ்வாய் கிழமை) மின்தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (18.10.22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் பகுதிகளி பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி கிழக்கு இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்சி பெட்டவாய்த்தலை மற்றும் சிறுகமணி துணை மின் நிலையங்களில் அவசரகால மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெட்டவாய்த்தலை, பழையூர்மேடு, பழங்காவேரி, காந்திபுரம், தேவஸ்தானம், சோழவந்தான் தோப்பு, திருமுருகன் நகர், காமநாயக்கன்பாளையம், காவல்காரபாளையம், வள்ளுவர் நகர், சிறுகமணி, பெருகமணி, சிறுகாடுதோப்பு, சங்கிலியாண்டபுரம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

இதேபோல, எஸ்.புதுக்கோட்டை, கோட்டையார்தோட்டம், பொய்யாமணி, சவாரிக்காடு, கருங்காடு, பாதிவயல்காடு, மாடுவிழுந்தான்பாறை, எஸ்.கவுண்டம்பட்டி, குறிச்சி, ஒத்தக்கடை, சூரியனூர், பாறைப்பட்டி, நடைபாலம், முதலைப்பட்டி, இனுங்கூர், பொறைக்கிழான்பட்டி கவுண்டனூர், அனஞ்சனூர், மேல்நங்கவரம், கீழ்நங்கவரம், தமிழ்சோலை, காமராஜர்நகர், வாரிக்கரை, பங்களாபுதூர், கணேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Trichy