ஹோம் /திருச்சி /

திருச்சி மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் - முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்கள்

திருச்சி மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் - முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்கள்

மின் தடை

மின் தடை

Trichy District | திருச்சி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் பற்றிய விவரம் மின் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டத்தில் நாளை (0312-2022) மின்தடை ஏற்படும் பகுதிகள் பற்றிய விவரங்கள் மின் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.

முசிறி துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, கீழ் கண்ட பகுதிகளில் நாளை காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என முசிறி மின்சார வாரிய செயற்பொறியாளர் மேரி மேக்டலின் பிரின்சி தெரிவித்துள்ளார்.

Must Read : கன்னியாகுமரிக்கு டூர் போறீங்களா? அழகான இந்த அருவியை மிஸ் பண்ணாதீங்க!

மின்தடை பகுதிகள்:

முசிறி, சிங்காரசோலை, பார்வதிபுரம் புதிய பஸ் நிலையம், ஹவுசிங் யூனிட், சந்தைப்பாளையம், அழகாபட்டி, திருச்சி ரோடு, துறையூர் ரோடு, சிலோன் காலனி, தண்டலை புத்தூர், வேளாகநத்தம், அந்தரப்பட்டி, தொப்பளாம் பட்டி, வடுகப்பட்டி, காமாட்சிபட்டி, சிந்தம்பட்டி, கருப்பணாம்பட்டி, அழகரை, மணமேடு, சீனிவாசநல்லூர், கோடியம்பாளையம், திருஈங்கோய்மலை, தும்பலம், முத்தம்பட்டி, மேட்டுப்பட்டி, சிட்டிலாரை மற்றும் சுற்றுவட்ட பகுதிகள்.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Trichy