முகப்பு /திருச்சி /

திருச்சி மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை - முன்னேற்பாடு செஞ்சிக்கோங்க

திருச்சி மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை - முன்னேற்பாடு செஞ்சிக்கோங்க

மின் தடை

மின் தடை

Trichy Power Cut  Areas | திருச்சி மாவட்டத்தில் உள்ள சில துணை மின் நிலையங்களில் நாளை (சனிக் கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறன. இதனால், மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் அம்பிகாபுரம் மற்றும் கோர்ட்டு வளாகம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (04-02-2023) இந்த பகுதியில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி நகரியம் இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் மற்றும் மன்னார்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மின் தடை பகுதிகள்:

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட புதுரெட்டிதெரு, பொன்விழாநகர், கிருஷ்ணன் கோவில் தெரு, பக்காளி தெரு, மத்திய பஸ் நிலையம், கண்டித்தெரு, பாரதிதாசன் சாலை, ராயல்சாலை, அலெக்ஸ்சாண்டர் சாலை, எஸ்.பி.ஐ.காலனி, பென்வெல்ஸ்சாலை, வார்னஸ்சாலை, அண்ணாநகர், குத்பிஷாநகர், உழவர்சந்தை, ஜெனரல்பஜார், கீழசத்திரம்சாலை, பட்டாபிராமன்சாலை, புத்தூர் நான்குவழிச்சாலை, அருணாதியேட்டர், கணபதிபுரம், தாலுகா அலுவலக சாலை, வில்லியம்ஸ்சாலை, சோனாமீனா தியேட்டர், நீதிமன்ற வளாகம், அரசு பொது மருத்துவமனை, பீமநகர், செடல்மாரியம்மன் கோவில், கூனிபஜார், ரெனால்ட்ஸ்சாலை, லாசன்ஸ்சாலை, வண்ணாரப்பேட்டை, பாரதிதாசன்காலனி, ஈ.வே.ரா.சாலை, வயலூர்சாலை, பாரதிநகர் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல் அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், இங்கிருந்து மின் வினியோகம் பெறும் அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரயில்நகர், நேருஜி நகர், காமராஜ் நகர், மலையப்ப நகர், ராணுவ காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகர், சக்தி நகர் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

Must Read : கோவை ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு 150 வயது... இந்த ரயில் நிலையத்திற்கு இத்தனை சிறப்புகளா!

மேலும், ராஜப்பா நகர், எம்.ஜி.ஆர். நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜிநகர், மேல கல்கண்டார்கோட்டை, கீழ கல்கண்டார் கோட்டை, வெங்கடேஸ்வரா நகர், கொட்டப்பட்டு (ஒரு பகுதி), அடைக்கல அன்னைநகர், அரியமங்கலம் (சிட்கோ காலனி), காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணீர்புரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Trichy