ஹோம் /திருச்சி /

திருச்சி மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் - இதில் உங்க ஏரியா இருக்கா?

திருச்சி மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் - இதில் உங்க ஏரியா இருக்கா?

மின் தடை

மின் தடை

திருச்சி மாவட்டத்தில் நாளை (வியாழக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் வாளாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (05-01-2023) மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி லால்குடி இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் அன்புசெல்வம் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின்தடை பகுதிகள்:

கீழப்பெருங்காவூர், வேலாயுதபுரம், தண்டாங்கோரை, நகர், வாளாடி, டி.வளவனூர், தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூர், சிறுமருதூர், மேலவாளாடி, புதுக்குடி, எசனைக்கோரை, அப்பாதுரை, கீழ்மாரிமங்கலம், அகலங்கநல்லூர் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

Must Read :சோழர்கால இசைக் கலைஞர்ககளின் பெயர்கள்... திருச்சி அருகே முக்கிய கல்வெட்டுகள் அமைந்துள்ள ஊர்!

இதேபோல, திருமங்கலம், மாந்துரை, நெய்குப்பை, ஆர்.வளவனூர், பல்லபுரம், புதூர் உத்தமனூர், வேளாண் கல்லூரி, ஆங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மின்சார வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Trichy