ஹோம் /திருச்சி /

திருச்சி மக்களே முன்னெச்சரிக்கையா இருங்க... நாளை (செவ்வாய் கிழமை) இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு..!

திருச்சி மக்களே முன்னெச்சரிக்கையா இருங்க... நாளை (செவ்வாய் கிழமை) இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு..!

மாதிரி படம்

மாதிரி படம்

Trichy District | திருச்சி மாவட்டத்தில் நாளை (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

மின்சாரம் இல்லாமல் சில நிமிடங்கள் கூட நம்மால் நிம்மதியாக இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு நம் அன்றாட வாழ்க்கையின் மிக முக்கிய பங்கை வகிக்கிறது மின்சாரம். குடியிருப்பு, பணியிடங்கள், தொழிற்காலைகள் என திரும்பும் திசை எல்லாம் மின்சாரத்தின் பயன்பாடு எங்கெங்கும் வியாபித்து காணப்படுகிறது.

இந்நிலையில், பராமரிப்பு பணிகள், மற்றும் சில காரணங்களுக்காக மின்சாரம் தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், திருச்சி மாவட்டம் சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (27-12-2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 9. 45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஸ்ரீரங்கம் இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : குடும்ப முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை.. திருச்சியில் அதிர்ச்சி!

மின் தடை பகுதிகள் :

சமயபுரம், மண்ணச்சநல்லூர்ரோடு, வெங்கங்குடி, வ. உ. சி. நகர், பூங்கா, எழில்நகர், காருண்யாசிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை, மேலசீதேவிமங்கலம், புறத்தாக்குடி, கரியமாணிக்கம், தெற்கு எதுமலை, பாலையூர், வலையூர், கன்னியாக்குடி, ஸ்ரீபெரும்புதூர், கூத்தூர், நொச்சியம், பளூர், பாச்சூர், திருவாசி, அழகியமணவாளம், குமரகுடி, திருவரங்கப்பட்டி, கோவர்த்தக்குடி, பனமங்கலம், எடையப்பட்டி, அய்யம்பாளையம், தத்தமங்கலம், தளுதாளப்பட்டி, சிறுகுடி, வீராணி, சிறுப்பத்தூர், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம் மற்றும் ஆயக்குடி ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

செய்தியாளர் : மணிகண்டன் - திருச்சி

First published:

Tags: Local News, Power Shutdown, Trichy