முகப்பு /திருச்சி /

திருச்சி மாவட்டத்தில் நாளைய மின்தடை பகுதிகள் - உஷார்.. முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்க..

திருச்சி மாவட்டத்தில் நாளைய மின்தடை பகுதிகள் - உஷார்.. முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்க..

மின் தடை

மின் தடை

Trichy District | திருச்சி மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (வியாழக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், நாளை (23-02-2023) இந்த பகுதியில் மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என செயற்பொறியாளர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின் தடை பகுதிகள்

.

துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெரும் துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டார்பட்டி, அதிகாரம், சடவேலாம் பட்டி, உசிலம்பட்டி, ஆலம்பட்டி, இக்கரை கோசுக்குறிச்சி, செவந்ததாம்பட்டி, தெத்தூர், செவல்பட்டி, பிடாரப்பட்டி வெங்கட் நாயகன்பட்டி, அடைக்கம்பட்டி நல்லூர்,

Must Read : முன்னணி நடிகர்கள் நடித்த இந்த காட்சிகள் எல்லாம் திருமயம் கோட்டையில்தான் எடுக்கப்பட்டிருக்கா!

பில்லுபட்டி கல்லுபட்டி, அயன்பொருவாய், வேளக்குறிச்சி மருங்காபுரி, காரைப்பட்டி, கரடிபட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, கள்ளகாம்பட்டி, சிங்கிலிப்பட்டி, எம். இடையப்பட்டி மற்றும் பழையபாளையம் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Trichy