முகப்பு /திருச்சி /

எச்சரிக்கை... திருச்சி மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது

எச்சரிக்கை... திருச்சி மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது

மின் தடை

மின் தடை

Trichy District | திருச்சி மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் பூவாளூர் மற்றும் சில துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், நாளை (21-02-2023) செவ்வாய் கிழமை மாவட்டத்தின் சில பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக லால்குடி இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் அன்புசெல்வம், திருச்சி கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர்கள் முத்துராமன் மற்றும், மேரிமேக்டலின் பிரின்சி ஆகியோர் தெரவித்துள்ளனர்.

மின் தடை பகுதிகள்:

பூவாளூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் லால்குடி நகர் பகுதிகளான அரசு பொது மருத்துவமனை, நாகம்மையார்தெரு, ராஜேஸ்வரிநகர், சாந்திநகர், நன்னிமங்கலம், பூவாளூர், பின்னவாசல், மணக்கால், கொப்பாவளி, வழுதியூர், நடராஜபுரம், படுகை, ஆதிகுடி, கொன்னைக்குடி, சாத்தமங்கலம், ஆனந்திமேடு, அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, பருத்திக்கால், காட்டூர், கொத்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, வெள்ளனூர், பெருவளநல்லூர், இடக்கிமங்களம், நஞ்சை சங்கேந்தி, புஞ்சை சங்கேந்தி மற்றும் இருதயபுரம் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, அம்மாப்பேட்டை துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் ராம்ஜி நகர், கள்ளிக்குடி, புங்கனூர், அரியாவூர், சத்திரப்பட்டி, அம்மாப்போட்டை, இனாம்குளத்தூர், வெள்ளிவாடி, நவலூர் குட்டப்பட்டு, பூலாங்குளத்துப்பட்டி சித்தாநத்தம், ஆலம்பட்டிபுதூர், கரையான்பட்டி, வடசேரி, புதுக்குளம், இடையப்பட்டி ஆகிய பகுதிகளிலும் நாளைமின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல் தா.பேட்டை துணை மின் நிலையத்திலும் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும், தா.பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவானூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தம்பாறை, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சபெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி,

Must Read : மதுரையில் ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற அருமையான இடம்... இயற்கை, அரிய பறவைகள் வரலாற்று சின்னங்களுடன் பயணிக்கலாம்!

காருகுடி, ஆங்கியம், அலகாபுரி, ஊரக்கரை, பெருகனூர், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவானூர் புதூர், மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்துராஜாபாளையம், லட்சுமணபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளுர், மங்கலம், ஜம்புநாதபுரம், திருத்தலையூர், சு.கோம்பை, நு.பாதர்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Trichy