முகப்பு /திருச்சி /

திருச்சி மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை - டேங்க்கில் தண்ணீரை நிரப்பி வச்சிக்கோங்க...

திருச்சி மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை - டேங்க்கில் தண்ணீரை நிரப்பி வச்சிக்கோங்க...

மின் தடை

மின் தடை

Trichy District | திருச்சி மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (வியாழக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் சிறுகமணி உள்ளிட்ட சில துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (16-02-2023) மின் வினியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என திருச்சி மின்வாரிய அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் தடை பகுதிகள்:

சிறுகமணி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சிறுகமணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பழங்காவேரி, வள்ளுவர்நகர், காமநாயக்கன்பாளையம், காவல்காரபாளையம், பெருகமணி, அந்தநல்லூர், ஜீயபுரம் மெயின்ரோடு, அனலை, திருப்பராய்த்துறை, எலமனூர், கொடியாலம், அம்மன்குடி, முக்கொம்பு ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல் பெட்டவாய்த்தலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பெட்டவாய்த்தலை, பழங்காவேரி, பாளையூர்மேடு, தேவஸ்தானம், நங்கவரம், கோட்டையர்தோட்டம், குமாரமங்கலம், குளித்தலை, பொய்யாமணி, நச்சலூர், தளிஞ்சி, சிறுகாடு, சங்கியாண்டபுரம், எஸ்.புதுக்கோட்டை, சோழவந்தான்தோப்பு, திருமுருகன்நகர், காந்திபுரம், இனுங்கூர், சுக்காம்பட்டி, பாதிவயல்காடு, மாடுவிளுந்தான்பாறை, கவுண்டம்பட்டி, குறுச்சி, பாறைப்பட்டி, பங்களாபுதூர், கணேசபுரம், நடைபாலம், பணிக்கம்பட்டி ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.

Must Read : வடிவேலு நடித்த ‘கைப்புள்ள வீடு’ எங்கிருக்கிறது தெரியுமா? - அடடே.. முன்னணி நடிகர்களின் இத்தனை படங்கள் இங்குதான் எடுக்கப்பட்டதா!

மேலும், மணிகண்டம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி தென்றல் நகர், முடிகண்டம், நேருஜி நகர், மலர் நகர், நாகமங்கலம், மணிகண்டம், செங்குறிச்சி, மேக்குடி, ஆலம்பட்டி, பாகனூர், தீரன்மாநகர், மாத்தூர், எசனப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Trichy