ஹோம் /திருச்சி /

திருச்சி மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - முன்னேற்பாடு செஞ்சிக்கோங்க..

திருச்சி மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - முன்னேற்பாடு செஞ்சிக்கோங்க..

திருச்சியில் நாளைய மின்தடை பகுதிகள்

திருச்சியில் நாளைய மின்தடை பகுதிகள்

Trichy Power cut Areas | திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் அம்மாபேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மணிகண்டம் ஒன்றியம் அம்மாபேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (நவம்பர் 2) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இந்த பகுதியில் மின்தடை செய்யப்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி ராம்ஜிநகர், கள்ளிக்குடி, புங்கனூர், அரியாவூர், சத்திரப்பட்டி, அம்மாபேட்டை, இனாம்குளத்தூர், வெள்ளிவடி, நவலூர் குட்டப்பட்டு, பூலாங்குளத்துப்பட்டி, சித்தானத்தம், ஆலம்பட்டி புதூர், கரையான்பட்டி, வடசேரி, புதுக்குளம் இடையபட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

Must Read : கும்பகோணத்தில் பிறந்து மலையாளத்தில் பிரபலமான நடிகர் - யார் தெரியுமா?

நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்பதால், பொதுமக்கள் உரிய முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு தமிழ்நாடு மின்சார வாரிய திருச்சி கிழக்கு செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த பகுதிகளில் மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. எனவே, மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் தங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Trichy