ஹோம் /திருச்சி /

திருச்சி மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் தெரியுமா?

திருச்சி மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் தெரியுமா?

திருச்சியில் மின்தடை பகுதிகள்

திருச்சியில் மின்தடை பகுதிகள்

Trichy Power cut Areas | திருச்சி மாவட்டம் முசிறி  துணைமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், இந்த பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

    திருச்சி மாவட்டம் முசிறி துணை மின்நிலையத்தில் நாளை (நவம்பர் 5) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

    திருச்சி மாவட்டம் முசிறி துணைமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    இதனால், நாளை பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    Must Read : விழுப்புரத்தில் பிறந்து நடிப்புக்கே இலக்கணம் தந்து... சர்வதேச விருதை வென்ற நடிகர் - இவர் யார் தெரியுமா? 

    அதன்படி, நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் : முசிறி சிங்காரச்சோலை புதிய பஸ் நிலையம், ஹவுசிங் யூனிட், கைகாட்டி, சந்தபாளையம், அலகாபட்டி, திருச்சி ரோடு, துறையூர் ரோடு, சிலோன் காலனி, தண்டலைப்புத்தூர், அந்தரப்பட்டி ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    அதேபோல, வேளகாநத்தம், தொப்பலாம்பட்டி, வடுகப்பட்டி, காமாட்சிபட்டி, சிந்தம்பட்டி, கருப்பனாம்பட்டி, அலகரை, மணமேடு, சீனிவாசநல்லூர், தும்பலம், சிட்டிலரை, மேட்டுப்பட்டி, முத்தம்பட்டி, திருஈங்கோய் மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும் என செயற்பொறியாளர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

    Published by:Suresh V
    First published:

    Tags: Local News, Power cut, Power Shutdown, Trichy