முகப்பு /திருச்சி /

திருச்சியில் நாளை (சனிக்கிழமை) இங்கெல்லாம் 6 மணி நேரம் பவர் கட்

திருச்சியில் நாளை (சனிக்கிழமை) இங்கெல்லாம் 6 மணி நேரம் பவர் கட்

திருச்சியில் மின் தடை ஏற்படும் பகுதிகள்

திருச்சியில் மின் தடை ஏற்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதியில் உள்ள கொப்பம்பட்டி, டி.முருங்கப்பட்டி மற்றும் தங்கநகர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம், வெங்கடாசலபுரம், கிருஷ்ணாபுரம், மாராடி, பி.மேட்டூர், எஸ்.என்.புதூர், கே.எம்.புதூர், சோபனபுரம், பச்சமலை, டி.முருங்கப்பட்டி, வலையப்பட்டி, டி.மங்கப்பட்டி, கோட்டப்பாளையம், தளுகை, டி.பாதர்பேட்டை, விஸ்வாம்பாள்சமுத்திரம் தெற்கு, வடக்கு, ஏரிக்காடு, கல்லாத்துக் கோம்பை பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

இதையும் படிங்க : திருச்சியில் 3,000 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி.. திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்

இதேபோல, ஆர்.கோம்பை, புதுப்பட்டி, ராஜபாளையம், சாலக்காடு, கவுண்டம்பாளையம், ஓசரப்பள்ளி, ஈச்சம்பட்டி, கீழப்பட்டி, சிறுநாவலூர், ரெட்டியார்பட்டி, நாகநல்லூர், முத்தையம்பாளையம், பச்சபெருமாள்பட்டி, ஆலத்துடையான்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று துறையூர் கோட்ட மின் செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே, இந்த பகுதி மக்கள் மின்தடை செய்யப்படுவதற்கு முன்னர் தங்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்.

First published:

Tags: Local News, Tiruchirappalli S22p24