முகப்பு /திருச்சி /

திருச்சி மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு...

திருச்சி மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு...

மின் தடை

மின் தடை

Trichy District | திருச்சி மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் (சனிக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் மத்திய பேருந்து நிலையம், எடமலைப்பட்டிபுதூர் உள்ளிட்ட இடங்களில் மின்சாதனபராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மறுநாள் (18-02-2023) மின் வினியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, சனிக்கிழமை காலை காலை 9.45 மணி முதல் மின்தடை செய்யப்படும் என திருச்சி மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின் தடை பகுதிகள்:

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மத்திய பேருந்து நிலையம் மற்றும் ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ்ரோடு, ராயல்ரோடு, புராமினேட்ரோடு, கலெக்டர்ஆபீஸ்ரோடு பகுதிகள், வார்னர்ஸ்ரோடு, லாசன்ஸ்ரோடு, ரெனால்ட்ஸ்ரோடு, கண்டோன்மெண்ட் பகுதிகள், மேலப்புதூர், புதுக்கோட்டை ரோடு மேம்பாலம் பகுதி, ஜென்னிபிளாசா பகுதி, கான்வெண்ட்ரோடு, தலைமை தபால்நிலைய பகுதி, குட்ஷெட்ரோடு, முதலியார்சத்திரம்,

காஜாப்பேட்டை ஒரு பகுதி, உறையூர் ஒரு பகுதி, மேட்டுத்தெரு, வாலாஜாபஜார், பாண்டமங்கலம், வயலூர்ரோடு-வண்ணாரப்பேட்டை மற்றும் குமரன்நகர், சண்முகாநகர், ரெங்காநகர், உய்யகொண்டான் திருமலை, உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதி, பாத்திமாநகர், குழுமணிரோடு-நாச்சியார் கோவில் கருமண்டபம் இருபுறமும், பொன்னகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக் கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் டி.எஸ்.பி.கேம்ப், கிராப்பட்டிகாலனி, அன்புநகர், அருணாச்சலநகர், காந்திநகர், பாரதிமின்நகர், சிம்கோகாலனி, அரசுகாலனி, ஸ்டேட்பேங்க்காலனி, கொல்லாங்குளம், எடமலைப்பட்டிபுதூர், சொக்கலிங்கபுரம், ராமச்சந்திராநகர், ஆர்.எம்.எஸ்.காலனி, கே.ஆர்.எஸ்.நகர், எடமலைப்பட்டி, ராஜீவ்காந்திநகர், கிருஷ்ணாபுரம், பஞ்சப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது.

Must Read : அலையாத்தி காடுகள்... படகு சவாரி... வெளிநாட்டு பறவைகள் - புதுச்சேரியில் அதிகம் அறியப்படாத அற்புத சுற்றுலா தலங்கள்!

மேலும், கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கே.கே.நகர், இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர்நகர், ஐயப்பநகர், எல்.ஐ.சி. காலனி, பழனி நகர், முல்லை நகர், ஓலையூர், இச்சிகாமாலைப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, ஆர்.வி.எஸ். நகர், வயர்லெஸ் ரோடு, செம்பட்டு பகுதி, குடித்தெரு,பாரதி நகர், காமராஜ் நகர், ஜே,கே.நகர், சந்தோஷ் நகர், ஆனந்த் நகர், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரி நகர், காஜா நகர், ஆர்.எஸ்.புரம், காந்தி நகர், பெரியார் தெரு பகுதிகளில் காலை 9.45 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Trichy