திருச்சியில் புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் ஏழை குழந்தைக்கு சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியில் வசிக்கும் சுரேஷ்குமாருக்கு, நிகிலேஷ்வரன் என்ற மகன் உள்ளார். மகனுக்கு 2 வயது இருக்கும் போது தான் அவருக்கு புற்றுநோய் இருப்பதை பெற்றோர்கள் கண்டுபிடித்தனர். புற்றுநோயுடன் போராட்டம் நடத்தும் மகன், பொருளாதார நெருக்கடியுடன் போராட்டம் நடத்தும் பெற்றோர் என மிகவும் சிரமப்படுகிறது இந்த குடும்பம்.
தங்களுக்குப் ஆண் குழந்தை பிறந்ததும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தது அந்தக் குடும்பம். ஆனால் அந்த ஆனந்தம் எல்லாம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. குழந்தையின் வலது கண்ணில் வெண்படலம் ஒன்று தோன்றியது, அத்துடன் அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சியெல்லாம் காற்றில் கரைந்த கற்பூரமாய் இல்லாமல் போனது.
நிகிலேஷ்வரனுக்கு இரண்டு வயது இருக்கும் போது இந்த வெண்படல சிகிச்சைக்காக பெற்றோர்கள் மருத்துவமனையை அணுகியபோது தான் இவர்களின் வாழ்க்கையில் புயல் அடித்துள்ளது. குழந்தையை பரிசோதனை செய்ததில் மருத்துவர்கள் கண்ணில் புற்றுநோய் உள்ளது என கூறியுள்ளார். மேலும் அடுத்த இடியாக வந்து இறங்கியது மருத்துவர்கள் மேலும் கூறிய வார்த்தைகள் ” கண்டிப்பாக குழந்தையின் கண்ணை எடுக்க வேண்டும் இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என” தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
வேறு வழியின்றி உயிரை காப்பாற்ற குழந்தையின் வலது கண்ணை எடுத்து விட்டனர். இந்த நிலையில் தினசரி குழந்தைக்கு தற்பொழுது மருந்துகள் உள்ளிட்ட தேவைகளுக்கு எங்களால் தற்பொழுது செலவு செய்ய இயலவில்லை. நானும் எனது மனைவியும் மாதம் மாதம் குழந்தையை மருத்துவமனை அழைத்து சென்று பரிசோதனை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது என பெற்றோர் கண்ணீர் வடிக்கின்றனர். இதனால் நாங்கள் இருவருமே வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது .அரசு எங்கள் குடும்பத்திற்கு நிதி வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.
அய்யோ! பச்சிளம் குழந்தைக்கு நேரக்கூடாத துன்பம் அது என கதறும் பெற்றோருக்கு உதவிக்கரம் நீட்ட விரும்பும் நபர்கள் கீழே உள்ள எண்ணை தொடர்புகொண்டு அவர்களுக்கு உதவி செய்யலாம்.
சுரேஷ்குமார் - தொலைபேசி எண் -82208 21389.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy