முகப்பு /திருச்சி /

உறையூர் வெக்காளியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா.. டன் கணக்கில் குவிந்த வண்ண மலர்கள்..

உறையூர் வெக்காளியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா.. டன் கணக்கில் குவிந்த வண்ண மலர்கள்..

X
உறையூர்

உறையூர் வெக்காளியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா

Trichy News | உறையூர் வெக்காளியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் சிறப்பு வாய்ந்த திருச்சி உறையூர் வெக்காளியம்மன் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றதாகும். மக்களின் குறைதீர்க்கும் விதமாக மேற்கூரையின்றி அருள்பாலித்துவரும், இவ்வாலயத்தில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தால் திருமணத்தடை மற்றும் புத்திர தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

பிரசித்திபெற்ற இவ்வாலயத்தில் பூச்சொரிதல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் உதவி ஆணையர் ஞானசேகரன் தலைமையில் ஊழியர்கள் கிராம மக்கள் உள்ளிட்ட பெருந்திரளான பக்தர்கள் மேளதாளங்கள் முழங்கிட பூக்களை கூடைகளில் ஊர்வலமாக கொண்டுவந்து அம்மனுக்கு சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதையும் படிங்க : மதுரை வழியாக செல்லும் 3 ரயில்கள் பகுதி நேரமாக ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு 

உறையூர் வெக்காளியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா

இதனைத்தொடர்ந்து பக்தர்கள் கொண்டுவரும் பூக்கள் யாவும் அம்மனுக்கு சாத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனுக்கு கூடைகளில் பூக்களைக் கொண்டுவந்து சாத்தி வழிபாடு செய்தும், விளக்குகளை ஏற்றியும் வழிபாடு செய்துவருகின்றனர். அதேநேரம் அம்மனுக்கு சாத்தப்பட்ட பூக்கள் யாவும் பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்பட்டது.

First published:

Tags: Local News, Trichy