முகப்பு /திருச்சி /

திருச்சி அருகே மிஸ்பண்ண கூடாத சுற்றுலா தலம்.. பசுமை நிறைந்த பொன்னணியாறு அணைய பாத்திருக்கீங்களா?

திருச்சி அருகே மிஸ்பண்ண கூடாத சுற்றுலா தலம்.. பசுமை நிறைந்த பொன்னணியாறு அணைய பாத்திருக்கீங்களா?

X
பொன்னணியாறு

பொன்னணியாறு அணை

Trichy Ponnaniyaru dam | திருச்சியைச் சுற்றியிருக்கும் மக்களுக்கு முக்கொம்பு, கல்லணை போன்ற அணையைப் பற்றித் தெரிந்த அளவிற்கு பொன்னணியாறு அணையைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

கரூர் மாவட்டம். கடவூர் அருகே பெருமாள்மலை மற்றும் செம்மலை ஆகிய மலைகளுக்கு இடையே இயற்கைப் பேரழகுடன் அமைந்துள்ள பொன்னணியாறு அணை, மழைக்காலங்களில் திரண்டுவரும் காட்டாற்று வெள்ளத்தைச் சேமிக்கும் வகையில், கடந்த 1974 ல் 51 அடி கொள்ளளவில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.

அணையின் நீர்பாசனம் திருச்சி மாவட்டத்திலுள்ள வையம்பட்டி சுற்றுவட்டார பகுதியாக உள்ளது. சுமார் 313 ஏக்கரில் அமைந்துள்ள பொன்னணியாறு அணை 33.60 சதுர கிலோ மீட்டர் வரை நீர்ப்பிடிப்பு பகுதியாகவும், 120 மில்லியன் கனஅடி கொள்ளளவாக அமைந்துள்ளது.

பொன்னணியாறு அணையின் முக்கியத்துவம்:

இதனால் அப்பகுதியை சுற்றி பல குளங்களுக்கு நீராதாரமாக விளங்குவதுடன், வையம்பட்டி பகுதியை சுற்றியுள்ள சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதிக்கு நீராதாரமாக விளங்குகிறது.கடுமையான வறட்சி காரணமாக அணையில் நீர்மட்டம் இன்றி கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் கரூர் மாவட்டம். மாயனூர் கதவணையில் இருந்து காவேரி ஆற்றின் வெள்ள உபரி நீரினை நீரேற்றம் செய்து பொன்னணியாறு அணை மற்றும் திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகேயுள்ள கண்ணூத்து அணை, துவரங்குறிச்சி பகுதியிலுள்ள மருங்கி ஏரி வரை இணைக்க விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதன் மூலம் திருச்சி மாவட்டத்திலுள்ள பொன்னணியாறு அணையின் கீழுள்ள சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், கண்ணூத்து அணையை சுற்றியுள்ள சுமார் ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும் பாசனம் பெறுவதுடன், குடிநீர் பஞ்சமின்றி இருக்கும் என ஒட்டுமொத்த மணப்பாறை மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

காவேரி, பொன்னணியாறு, கண்ணூத்து அணைகள் மற்றும் மருங்கி ஏரி திட்டத்தினை தொகுதி மக்களின் குடிநீர், விவசாயத்திற்கு பயன்பெறும் வகையில் செயல்படுத்தவேண்டும் என அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதனை தொடர்ந்து காவிரி உபரி நீீரை பொன்னணியாறு, கண்ணூத்து அணைகளுக்கு நீரேற்றம் செய்யும் திட்ட ஆய்வு பணிக்காக கடந்த அதிமுக ஆட்சியில் ரூ. 40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

தொடர்ந்து பொதுப்பணி துறை அதிகாரி மற்றும் மாவட்ட நிர்வாகம் அணையை ஆய்வு செய்தும், இதுவரை பொன்னணியாறு, கண்ணூத்து அணைக்கு காவிரி நீரை நீரேற்றம் திட்ட பணிகள் குறித்து எந்தவித முன்னேற்றமும் இல்லை.

பொன்னணியாறு அணையில் கடந்த 15 ஆண்டுக்கு மேலாக நீர்பாசனத்தை நம்பியிருந்த பெரும்பாலான விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து மாற்று தொழிலுக்கு சென்றுவிட்ட நிலையில், எஞ்சிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், நீத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி குடிநீர் தேவையை நிறைவேற்றும் வேண்டும். காவிரி நீரை பொன்னணியாறு, கண்ணூத்து அணைகளுக்கு நீரேற்றம் செய்வதன் மூலம் 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும், வையம்பட்டி, மணப்பாறை, மருங்காபுரி பகுதி குளம், குட்டைகள் மற்றும் கிணறுகளில் நீர் மட்டம் உயரும்.

பொதுமக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற பொன்னணியாறு, கண்ணூத்து அணைகளில் காவிரி நீரை நீரேற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து விவசாயிகளின் நீண்டநாள் எதிர்ப்பார்பாக உள்ளது.

பசுமையும் பூங்காவும்..

திருச்சியைச் சுற்றியிருக்கும் மக்களுக்கு முக்கொம்பு, கல்லணை போன்ற அணையைப் பற்றித் தெரிந்த அளவிற்கு பொன்னணியாறு அணையைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இரண்டு மலைகளுக்கு இடையில், இயற்கையின் புடைசூழ மிகவும் அமைதியுடன், ஒய்யாரமாக அமைந்துள்ளது இந்த பொன்னணியாறு அணை. மண்வாசனை நம் மனதை மகிழ்ச்சியாக்க அந்த மகிழ்ச்சியுடன் அணையைச் சுற்றிப் பார்த்தோம். காட்டில் உள்ள பறவைகளும், மலைகளின் இடையே அணையின் அமைப்பும் ரம்மியமான காட்சியாக இருந்தது.

பராமரிக்கப்படாத பூங்கா:

பூங்காக்களை பராமரிக்க கடந்த 2011ம் ஆண்டு உலக வங்கி மூலம் 2.50 கோடி நிதி பெற்று நடைபாதை, பூங்காக்கள் அழகுபடுத்தப்பட்டது. அதையடுத்து, பாசன வாய்க்கால்ப் பகுதிகளை உலக வங்கியின் இந்தியத் தரக்கட்டுப்பாடு ஆலோசகர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகளின் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், ரூ.2.96 லட்சம் நிதியுதவி கிடைத்தது.

சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பு:

அதன்படி சேதமடைந்த பாசன வாய்க்கால்ப் பகுதிகளை கான்கிரீட் பாதைகளாகச் சீரமைக்கும் பணி நடந்தது. அதற்கு பிறகு பூங்கா முற்றிலும் பராமரிக்காமல் கிடப்பில் போட்டதால் தற்போது பூங்காக்கள் முற்றிலும் சேதமடைந்த சிலை , குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள் அனைத்தும் உடைந்த நிலையில் காணப்படுகிறது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது விரைவில் பூங்காவை சீரமைத்து தர வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

First published:

Tags: Local News, Tourist spots, Trichy