Home /trichy /

திருச்சியில் செப்டம்பர் 24-ல் கார்த்திக்ராஜாவின் ‘பொன்மாலை பொழுது’ இசை நிகழ்ச்சி- திரைப்பிரபலங்கள் பலர் பங்கேற்பு

திருச்சியில் செப்டம்பர் 24-ல் கார்த்திக்ராஜாவின் ‘பொன்மாலை பொழுது’ இசை நிகழ்ச்சி- திரைப்பிரபலங்கள் பலர் பங்கேற்பு

கார்த்திக் ராஜா

கார்த்திக் ராஜா

செப்டம்பர் 24ஆம் தேதி இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக்ராஜாவின் 'பொன்மாலை பொழுது' என்கின்ற இசை நிகழ்ச்சி திருச்சியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
    திருச்சியில் வரும் செப்டம்பர் 24-ம் தேதி, இசைஞானி இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக்ராஜாவின் 'பொன்மாலை பொழுது' என்கின்ற இசை நிகழ்ச்சி (லைவ் கான்சர்ட்) நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில், நடன இயக்குனர் கலா மாஸ்டர் குழுவினரின் நடன நிகழ்ச்சி இடம்பெற உள்ளது. பிரபல நடிகை குஷ்பு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

    நகைச்சுவை நடிகர்கள் யோகிபாபு, சதீஷ் மற்றும் பிரபல பாடகர்கள் ஹரிஹரன், உன்னிமேனன், சாதனா சர்கம், சிவானி உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சிக்கான அறிமுக விழா நேற்று திருச்சியில் நடந்தது.

    இதில் பேசிய திருச்சி ரோட்டரி சங்க ஆளுநர் ஜெரால்டு, “நமது ரோட்டரி சங்கத்தின் மூலம் ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் மிகப்பெரிய திட்டம் ஒன்றை செயல்படுத்த திட்டமிட்டோம். அதற்கு அதிகளவு நிதி தேவைப்பட்டது.

    அதற்காக வரும் டிசம்பரில் இதுபோன்ற ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்தலாம் என்று திட்டமிட்டோம். அதற்குள்ளாகவே இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் நிகழ்ச்சிக்கான அரிய வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது”என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Trichy

    அடுத்த செய்தி