ஹோம் /திருச்சி /

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் களைகட்டிய பொங்கல் விழா..

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் களைகட்டிய பொங்கல் விழா..

X
திருச்சி

திருச்சி

Trichy District Integrated Court : நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.

திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாபு மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான உறியடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர்.

தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் மண் பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.பசு கன்றுகள் அழைத்துவரப்பட்டு, தாரை, தப்பட்டை முழங்க, கரும்பு மற்றும் வாழை தோரணங்கள் கொண்டு அந்தப் பகுதி முழுவதும் அலங்கரிக்கப்பட்டு பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பொங்கல் விழா காரணமாக நீதிமன்ற வளாகம் விழாக்கோலம் பூண்டிருந்தது.

First published:

Tags: Local News, Pongal 2023, Trichy