ஹோம் /திருச்சி /

மாட்டு வண்டியில் மேளதாளம் முழங்க ஊர்வலம்.. திருச்சி கல்லூரி மாணவிகளின் மாஸ் பொங்கல் கொண்டாட்டம்..

மாட்டு வண்டியில் மேளதாளம் முழங்க ஊர்வலம்.. திருச்சி கல்லூரி மாணவிகளின் மாஸ் பொங்கல் கொண்டாட்டம்..

X
திருச்சி

திருச்சி

Trichy Pongal Celebration : திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி  வளாகத்தில் பொங்கல் திருவிழா.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து மாட்டு வண்டி, குதிரை வண்டி ஆகியவற்றில் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். கல்லூரி மைதானத்தில் அனைத்து கல்லூரி மாணவிகள் தனித்தனியாக பொங்கல் பானையினை விறகு அடுப்பில் வைத்து பொங்கல் சமையல் செய்தனர்.

இதனையடுத்து கல்லூரி வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் கல்லூரி சேர்மன் உள்ளிட்ட இயக்குனர்கள் பேராசிரியர்கள் முதல்வர்கள், மாணவ, மாணவிகள் என அனைவரும் ஒன்று திரண்டு சாமி தரிசனம் செய்து மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி, கூட்டு வண்டி ஆகியவற்றில் மேளதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் பொங்கல் சமைத்த மைதானத்திற்கு வந்து சமைத்த பொங்கலை இறைவனுக்கு வணங்கி கொண்டாடினர். இதன் பின்னர் மாணவ மாணவிகளின் மயிலாட்டம் ஒயிலாட்டம், கல் தூக்கும் போட்டி போன்ற பல்வேறு விளையாட்டுகள் நடைபெற்றன.

First published:

Tags: Local News, Pongal 2023, Trichy