Union
Budget 2023

Highlights

ஹோம் /திருச்சி /

திருச்சியில் அஜித் ரசிகர்கள் மீது காவல்துறை தடியடி

திருச்சியில் அஜித் ரசிகர்கள் மீது காவல்துறை தடியடி

X
திருச்சி

திருச்சி அஜித் ரசிகர்கள் மீது காவல்துறை தடியடி

Police beat Ajith fans in Trichy | அதிவேகமாக வாகனத்தை இயக்கி திரையரங்கு முன் அலப்பறை செய்ததால் காவல்துறையினர் தடியடி நடத்தினர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி துணிவு படம் பார்க்க வந்த அஜித் ரசிகர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சியில் எல்ஏ சினிமாஸில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தை பார்க்க திரையரங்கு முன் ஆயிரக்கணக்கான  ரசிகர்கள் குவிந்து பட்டாசு வெடித்து பட்டாசு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்திற்கு பெரிதும் பாதிக்கப்பட்டது.

மேலும் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அஜித் ரசிகர்கள் அதிவேகமாக வாகனத்தை இயக்கி வந்தனர். தொடர்ந்து அந்த வழியாக வந்த காரின் மீது ஏரியும், வெடிக்கும் பட்டாசுகளை தலைமேல் வைத்து வெடித்தும் அஜித் ரசிகர்கள் அலப்பறையில் ஈடுபட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நேரம் ஆக ஆக திரையரங்கின் முன்பு கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதால் காவல்துறையினர் மிரண்டு போனனர்.

இதனிடையே திரையரங்கிற்கு வெளியே இரு சக்கர வாகனத்தில் அதிகம் சத்தம் எழுப்பி அட்ராசிட்டி செய்து வந்தனர்.  இதனால் ஆத்திரம் அடைந்த காவல்துறையினர் அஜித் ரசிகர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

First published:

Tags: Local News, Thunivu, Trichy