ஹோம் /திருச்சி /

திருச்சி மாநகராட்சியில் நாளை குடிநீர் நிறுத்தம்... எந்தெந்த இடங்களில் தெரியுமா?

திருச்சி மாநகராட்சியில் நாளை குடிநீர் நிறுத்தம்... எந்தெந்த இடங்களில் தெரியுமா?

திருச்சி மாநகராட்சியில் நாளை குடிநீர் நிறுத்தம்

திருச்சி மாநகராட்சியில் நாளை குடிநீர் நிறுத்தம்

Trichi District News : திருச்சி மாநகராட்சியில் குடிநீர் குழாய் உடைப்பை சரியும் செய்யும் பணிகள் நடப்பதால் நாளை குடிநீர் நிறுத்தப்பபடும் என்று மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாநகராட்சியில் குடிநீர் குழாய் உடைப்பை சரியும் செய்யும் பணிகள் நடப்பதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை ) குடிநீர் நிறுத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகராட்சியில் குடிநீர் விநியோகிக்கும் பகுதிகளில் அவ்வப்போது, திடீரென்று உடைப்பு ஏற்பட்டு விடுகிறது. இதனால் பொதுமக்களுக்கு முறையாக குடிநீரை விநியோகிக்க முடிவதில்லை. இதையொட்டி பராமரிப்பு பணிகளும் நடக்கிறது.

இந்நிலையில், திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பொது தரைமட்ட கிணறு நீர் உந்து நிலையத்தில் இருந்து உந்தப்படும் பிரதான குழாயில் சங்கிலியாண்டபுரம் பிச்சைநகர் அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் மராமத்து பணிகளில் ஊழியர்கள் சனிக்கிழமை (இன்று) ஈடுபட்டனர்.

இதையும் படிங்க : திருச்சியில் நடுரோட்டில் பழுதாகி நின்ற 108 ஆம்புலன்ஸ்... மழையில் நனைந்தபடி தள்ளிய பெண் ஊழியர்!

இதையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) கீழ்கண்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுப்படுகிறது. அதன்படி, திருச்சி மாநகராட்சியில் உள்ள தேவதானம், விறகுபேட்டை புதியது, கல்லுக்குழி புதியது, கல்லுக்குழி பழையது, ஜெகநாதபுரம் புதியது, ஜெகநாதபுரம் பழையது, அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, சங்கிலியாண்டபுரம் புதியது, சங்கிலியாண்டபுரம் பழையது மற்றும் மகாலட்சுமி நகர் ஆகிய 10 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உடைப்பு சரி செய்யப்பட்ட பின் நாளை மறுநாள் (14ம் தேதி)(திங்கட்கிழமை) குடிநீர் வினியோகம் நடைபெறும். இதனால் பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Trichy