முகப்பு /திருச்சி /

ரூ.30,000 சம்பளம்: திருச்சி IIM-ல்  வேலைவாய்ப்பு...  உடனே அப்ளை பண்ணுங்க!

ரூ.30,000 சம்பளம்: திருச்சி IIM-ல்  வேலைவாய்ப்பு...  உடனே அப்ளை பண்ணுங்க!

திருச்சி IIM

திருச்சி IIM

Trichy District | திருச்சி IIM-ல் Academic Associate பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் இருப்பவர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சி (Indian Institute of Management Tiruchirappalli)-ல் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வேலைக்கு தகுதியும், ஆர்வமும் இருப்பவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன.

அதன்படி, Academic Associate பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.A, B.Sc, B.Tech/B.E, M.A, M.Com, MBA/PGDM, M.Phil/Ph.D என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 மற்றும் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- முதல் ரூ.30,000/- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Written test / Skill test மற்றும் Personal interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் இந்த https://www.iimtrichy.ac.in/sites/default/files/upload/17Jan2023193132_20230117193132RollingAdvt-AcademicAssociate%28oncontract%29-17.01.2023.pdf அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : சிலிர்ப்பூட்டும் சின்னக் கல்லாறு அருவி... ஒரு என்ஜாய் ட்ரிப் போகலாம்!

மேலும், விவரங்களை https://www.iimtrichy.ac.in இந்த இணைய முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

First published:

Tags: Employment, Job Vacancy, Local News, Trichy