திருச்சி தாயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளையம்மாள் (77). இவர் சேமரசம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், “நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு நான்கு மகள்கள் உள்ளனர். இதில் ஒருவரை மட்டும் உள்ளூரில் திருமணம் செய்து கொடுத்துள்ளோம். சந்திரா என்பவள் தான் உள்ளூரில் இருந்து வசித்து வருகிறாள்.
எனது மகள் சந்திரா கஷ்டப்பட்டு வாழ்ந்து வருகிறாள் என்பதால், அவளுக்கு 2 செண்டு இடம் எழுதிக் கொடுத்துள்ளோம். வயதான காலத்தில் என்னை பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் நான் எழுதிக் கொடுத்துள்ளேன்.
எனக்கு இப்போது வயதாகி விட்டது என்பதால் மீதமுள்ள சொத்துக்களை என்னுடைய 3 மகள்களுக்கும் சொத்துக்களை பாகம் பிரித்து கொடுக்கலாம் என்று நினைத்த பொழுது என்னுடைய மொத்த சொத்துக்களையும் எங்களிடம் ஏமாற்றி எழுதி வாங்கியது தெரியவந்தது” என தெரிவித்திருந்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy