ஹோம் /திருச்சி /

திருச்சி செண்ட்ரல் பஸ் நிலையம் அருகே கட்டிமுடிக்கப்பட்டுள்ள 3 மணிமண்டபங்கள் திறப்பு எப்போது? ஆர்வத்தில் மக்கள்

திருச்சி செண்ட்ரல் பஸ் நிலையம் அருகே கட்டிமுடிக்கப்பட்டுள்ள 3 மணிமண்டபங்கள் திறப்பு எப்போது? ஆர்வத்தில் மக்கள்

X
திருச்சி

திருச்சி

Trichy Central Bus stand : பெரும்பிடுகு முத்தரையர், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், தியாகராஜ பாகவதர் என 3 தலைவர்களுக்கு திருச்சி செண்ட்ரல் பேருந்தி நிலையம் அருகே அமைக்கப்பட்ட மணி மண்டபங்கள் எப்போது திறக்கப்படும் என பொதுமக்கள் ஆவல்..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் மற்றும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் மணிமண்டபம், எம்.கே.தியாகராஜ பாகவதர் மணிமண்டபம் உள்ளிட்ட 3 மணிமண்டபங்கள் பொதுப்பணித்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு மூலம் கட்டப்பட்டுள்ளது.

இதில் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் ரூ.99 லட்சம் செலவில் முழு உருவச் சிலையுடன் 2,400 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது‌. இதைத் தவிர்த்து 1,184 சதுர அடி பரப்பளவில இந்த மண்டபத்தின் தரை தளமானது கிரானைட் கற்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

நீதிக்கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் மணிமண்டபம் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் 1,722 சதுர அடி பரப்பளவு, தியாகராஜ பாகவதர் மணிமண்டபம் ரூ.42 லட்சம் செலவில் 1,722 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

கட்டிமுடிக்கப்பட்டுள்ள 3 மணிமண்டபங்கள்

இந்நிலையில் முத்தரையர் மணிமண்டபத்திற்கு ரூ.48 லட்சமும், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் மணிமண்டபத்திற்கு ரூ.34 லட்சமும், தியாகராஜ பாகவதர் மணிமண்டபத்திற்கு ரூ.36 லட்சம் என கூடுதல் நிதி கேட்டு அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்னும் நிதி ஒதுக்கப்படாததால் இந்த மூன்று மணி மண்டபங்களும் முழுமை பெறாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

கட்டிமுடிக்கப்பட்டுள்ள 3 மணிமண்டபங்கள்

இது குறித்து சமூக ஆர்வலரிடம் கேட்டபோது மூன்று முக்கிய தலைவர்களின் மணிமண்டபம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் அருகில் கட்டப்பட்டுள்ளது. இவர்களுடைய வாழ்க்கை வரலாறும் சாதனைகளும் இன்றைய தலைமுறைக்கு பெரிய அளவில் தெரிவதில்லை. பல சாதனைகளை படைத்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தான் இந்த மணி மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளது.

பணிகள் முடிந்தும் ஒரு சில காரணங்களுக்காக இந்த மணிமண்டபங்கள் திறக்கப்படாத சூழ்நிலையை நிலவி வருகிறது . மேலும் மூன்று மணி மண்டபங்களும் எப்போது திறப்பார்கள் என திருச்சி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Trichy