ஹோம் /திருச்சி /

தை அமாவாசை : திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் குவிந்த பக்தர்கள்

தை அமாவாசை : திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் குவிந்த பக்தர்கள்

X
ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம்

Srirangam : தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் ஏராளமானோர் குவிந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு சிறந்த இடமாக கருதப்படுகிறது. குறிப்பாக திருச்சி மட்டுமல்லாமல் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் கூடி தங்களது முன்னோர்களுக்கு தை, ஆடி, புரட்டாசி உள்ளிட்ட அமாவாசை நாட்களில் தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.

அந்த வகையில் தை அமாவாசையையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் ஏராளமான மக்கள் ஒன்று கூடி வாழை இலை, பூஜை பொருட்கள், அகத்தி கீரை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி சென்று ஆர்வமுடன் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

First published:

Tags: Local News, Trichy