ஹோம் /திருச்சி /

காணும் பொங்கல்: திருச்சி முக்கொம்பில் குவிந்த பொதுமக்கள்!

காணும் பொங்கல்: திருச்சி முக்கொம்பில் குவிந்த பொதுமக்கள்!

X
காணும்

காணும் பொங்கலை கொண்டாடிய திருச்சி வாசிகள்.

Trichy mukkombu kanum pongal celebration | காணும்பொங்கலான நேற்று காலையிலேயே திருச்சி முக்கொம்பிற்கு குடும்பம் குடும்பமாக வருகை தந்த பொதுமக்கள் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களில் பொழுதைக்கழித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

காணும் பொங்கலையொட்டி திருச்சி முக்கொம்பில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

பொங்கல் பண்டிகையின் 3வது நாள் நேற்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை கன்னிப் பொங்கல் என்றும் கணுப் பண்டிகை என்றும் அழைக்கப்படும்.

இந்நாளில் உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோரிடம் ஆசி பெறுதல் போன்றவற்றை மக்கள் செய்வது வழக்கம்.

அதேபோல் காணும் பொங்கலையொட்டி மக்கள் சுற்றுலா தளங்களுக்குச் தங்கள் குடும்பத்தினருடன் சென்று உற்சாகமாக கொண்டாடுவர். அதன்படி காணும் பொங்கலான நேற்று காலையிலேயே திருச்சி முக்கொம்பிற்கு குடும்பம் குடும்பமாக வருகை தந்தனர்.

குழந்தைகளுடன் உற்சாகமாக விளையாடியும், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களில் பொழுதைக்கழித்தும் காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.

கிராமப்புறங்களில் உறவினர்களுடன் ஒன்றுகூடி உணவு சமைத்து அனைவரும்00 ஒன்றாக அமர்ந்து உண்டு மகிழ்வர். நகர்புறங்களில் கலாச்சாரம் மாற்றத்தை அடுத்து, இதுபோன்ற சுற்றுலா தலங்களுக்கு சென்று குடும்பத்தினர், உறவினர்களுடன் காணும் பொங்கலை கொண்டாடினர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமானதால் முக்கொம்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

First published:

Tags: Local News, Mukkombu, Pongal festival, Trichy