ஹோம் /திருச்சி /

திருச்சி மக்களின் 2023 புத்தாண்டு கொண்டாட்டம்..

திருச்சி மக்களின் 2023 புத்தாண்டு கொண்டாட்டம்..

X
திருச்சி

திருச்சி

New Year Celebration in Trichy : புத்தாண்டை கொண்டாடிய திருச்சி மக்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாநகர பகுதியில் இரவு முதலே புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. புத்தாண்டை வரவேற்கும் வகையில் இரவில் திருச்சி மத்திய பஸ் நிலையம், திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் மற்றும் பெரியகடை வீதி, என்.எஸ்.பி.சாலை, தில்லை நகர் மெயின்ரோடு பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

சில நட்சத்திர விடுதிகளில் இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன. இதன் ஒரு பகுதியாகநிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்ததோடு, புத்தாண்டு வாழ்த்துகள் என வாழ்த்து கோஷம் எழுப்பினர்.

மேலும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் இளைஞர்கள் பலர் நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

இதையும் படிங்க : திருச்சியில் குரங்குகளால் அலறும் கிராமம்.... நடவடிக்கை எடுக்குமா வனத்துறை...?

மேலும் சாலைகளில் செல்வோரிடம் இளைஞர்கள் புத்தாண்டு வாழ்த்துகள் கூற, பதிலுக்கு அவர்களும் வாழ்த்து கூறி அன்பை வெளிப்படுத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சில இடங்களில் இளைஞர்கள் பட்டாசு வெடித்தனர். கண்கவர் வாணவேடிக்கைகளும் நடைபெற்றது. சமூக வலைத்தளங்களான முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப், எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். மூலமும் புத்தாண்டு வாழ்த்துகளை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிமாறிக்கொண்டனர்.

செய்தியாளர் : மணிகண்டன் - திருச்சி

First published:

Tags: Local News, Trichy