பல நூற்றாண்டு காலமாக தமிழர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை பாரம்பரியமாக விளையாடி வருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டானது ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும்.
தமிழர்களின் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு இருந்து வரும் நிலையில், இந்த போட்டிகளின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி விலங்குகள் நல அமைப்பான பீட்டா வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதித்து கடந்த 2014ம் ஆண்டு உத்தரவிட்டது. இதனையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் 2017ம் ஆண்டு இளைஞர்கள் ஒன்று திரண்டு மாபெரும் போராட்டத்தை நடத்தினர். அது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த பேராட்டத்தை தொடர்ந்து, அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வந்தார். அதைத்தொடர்ந்து 2017ம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு சட்டம் என்ற பெயரில் நிரந்தரச் சட்டம் இயற்றப்பட்டது.
இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய தொடர்ந்து முயற்சிக்கின்றன. இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விவாதங்களும் நடைபெற்றன. ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா அமைப்புகள் முன்வைத்த பல வாதங்களை நீதிபதிகள் நிராகரித்தனர்.
உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வாதங்கள் நடைபெற்றன. அப்போது, பீட்டா தரப்பில், ”நாங்கள் 5ஆண்டுகளாக ஆய்வு செய்து சேகரித்த தரவுகளைத்தான் தாக்கல் செய்திருக்கிறோம். எந்த ஒரு காளையும் ஜல்லிக்கட்டில் ஓட விரும்புவது இல்லை என்றும் இதுஒரு கொடூரமான விளையாட்டு என்றும் ஜல்லிக்கட்டில் காளைகள் கட்டாயமாக ஓட விடப்படுகின்றன” என்றும் பல வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தின் கலாச்சார நிகழ்ச்சி என்றும், ஜல்லிக்கட்டில் காளைகளுக்கு எந்த கொடுமையும் இழக்கப்படுவதில்லை. ஜல்லிக்கட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு, கேளிக்கை அல்ல. வரலாற்று, கலாச்சார வாய்ந்த நிகழ்வு என்று\" என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வாதாடியது.
இவ்வாறாக அனைத்து தரப்பு வாதங்களும் நடத்து முடிந்து, தீர்ப்பு மட்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது நிலையில் இன்று நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.வி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய 5நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பை அறிவித்தது.
இன்று நடைபெற்ற இறுதி விசாரணையில் ஜல்லிக்கட்டு என்பது கலாச்சாரம் சார்ந்தது எனவே அதில் உச்சநீதிமன்றம் தலையிடாது மேலும் தமிழக அரசு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை நிறைவேற்றியுள்ளது செல்லும், இனி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த எந்தவித தடையும் இல்லை எனக் கூறி தீர்ப்பளித்தது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த தீர்ப்புக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக திருச்சி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jallikattu, Local News, Trichy