திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மனுக்கு நடைபெறும் 5 பெரும் உற்சவங்களில் பஞ்சப்பிரகாரம் என்பது வசந்த உற்சவமாகும். பஞ்சபூதங்கள் ஐம்பெருந்தொழில், ஐம்பெரும்கலை, ஐம்பெரும்பீடம் மற்றும் ஐம்பெரும் உயிர் இவற்றை விளக்கும் தத்துவமாக உள்ள இந்த பஞ்சப்பிரகார உற்சவம். மாயாசூரனை சம்ஹரிக்க பராசக்தி மஹாமாரி வடிவம் எடுத்த இத்தலத்தில் அக்னிநட்சத்திரத்தில் உஷ்ண கிராந்தியை தணிப்பதற்காக பிரதி வருடம் மே 6ம் தேதி முதல் 23ம் தேதி வரை பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது.
நவக்கிரகங்களையும், 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும் இத்தலத்தில் தனது கட்டுப்பாட்டுக்குள் இயக்கும் அஷ்ட புஜங்களுடன் கூடிய நூதன ஆதிபீட சுயம்பு அம்மனுக்கு வசந்த உற்சவத்தின் நடுநாயகமாக பஞ்சபிரகார உற்சவம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து வேண்டியவருக்கு வேண்டிய வண்ணம் அருள்பாலித்து சக்தியாக விளங்கும் அம்மன் இரவு 12.00 மணிக்கு வெள்ளி விமானத்தில் வெண்ணிற பாவாடை அணிந்து மூலஸ்தான கருவறையை ஒட்டிய பிரகாரம் முதல் சுற்று தங்க கொடிமரம் 2வது சுற்று தங்க ரதம் வலம் வரும் பிரகாரம் 3வது சுற்று தெற்கு ரத வீதியில் பாதியும், வடக்கு மாடவாள வீதியில் நான்காவது சுற்று.. கீழ ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி 5வது சுற்றாகவும் என பஞ்சப்பிரகார திருச்சுற்றுகளை அம்மன் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy