ஹோம் /திருச்சி /

'சுதந்திர சிறகுகள் சுவாசத்தின் சுவடுகள்'.. மாணவர்களின் ஓவியக் கண்காட்சி.

'சுதந்திர சிறகுகள் சுவாசத்தின் சுவடுகள்'.. மாணவர்களின் ஓவியக் கண்காட்சி.

ஓவியக்

ஓவியக் கண்காட்சி, திருச்சி

Trichy Latest News : 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, டிசைன் ஓவிய பள்ளி சார்பில் சுதந்திர சிறகுகள் சுவாசத்தின் சுவடுகள் தலைப்பில் ஓவியக் கண்காட்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

திருச்சி, டிசைன் ஓவிய பள்ளி சார்பில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 'சுதந்திர சிறகுகள் சுவாசத்தின் சுவடுகள்' என்ற தலைப்பில் ஓவியக் கண்காட்சி ஆகஸ்ட் 13, 14 மற்றும் 15 ஆகிய மூன்று நாட்கள் மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்று வருகிறது.

சுதந்திர சிறகுகள் சுவாசத்தின் சுவடுகள் தலைப்பில் 38 மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் நான்கு ஓவியங்களை காட்சிப்படுத்தி இருக்கின்றனர். அதில் ஒரு ஓவியம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த ஓவியம் ஆகும்.

ஓவியக் கண்காட்சி, திருச்சி

சுதந்திரப் போராட்ட வீரர்களில் வேலு நாச்சியார், பகத்சிங், திருப்பூர் குமரன், கட்டபொம்மன், வ.உ. சிதம்பரம் பிள்ளை, திப்புசுல்தான், தீரன் சின்னமலை, கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், சுப்ரமணிய பாரதியார், மருதநாயக பிள்ளை, ஊமைத்துறை, சித்தரஞ்சன் தாஸ், பண்டிட்ஜவஹர்லால் நேரு..

ஓவியக் கண்காட்சி, திருச்சி

ராணி லட்சுமி பாய், மாதாங்கிணி ஹஜ்ரா, குன்வர் சிங், அஞ்சலை அம்மாள், புலித் தேவர், அழகு முத்துக்கோன், மருதுபாண்டியர், பால கங்கார திலக், உள்ளிட்டோர் ஓவியத்துடன் மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றினை 75 ஓவியங்களை ஒரே ஓவியமாக காட்சிப்படுத்தியிருந்தனர்.

ஓவியக் கண்காட்சி, திருச்சி

இதில் 140 க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. ஓவிய கண்காட்சி ஏற்பாட்டினை டிசைன் ஓவியப் பள்ளியின் நிர்வாக இயக்குனர் மதன், முதல்வர் நஸ்ரத் பேகம் செய்திருந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Independence day, Local News, Trichy