முகப்பு /செய்தி /திருச்சி / திருச்சியில் கொள்ளையடிக்கப்பட்ட ஒரு கிலோ தங்கம்... 2 பேர் கைது..!

திருச்சியில் கொள்ளையடிக்கப்பட்ட ஒரு கிலோ தங்கம்... 2 பேர் கைது..!

நகை கொள்ளையடிக்கப்பட்ட இடம்

நகை கொள்ளையடிக்கப்பட்ட இடம்

Trichy gold theft |

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மலைக்கோட்டை அருகே சந்துக்கடையை ஒட்டியுள்ள சௌந்தர பாண்டியன் பிள்ளை தெருவில் வசிக்கும் ஜோசப் என்பவர், தனது வீட்டின் முன்புறத்தில் நகைப்பட்டறை நடத்தி வருகிறார்.இவர் பழைய நகைகளை வாங்கி உருக்கி, மோதிரம், தோடு, மூக்குத்தி போன்ற பலவகையான ஆபரணங்களை தயார் செய்து, விற்பனைக்காக பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து வருகிறார்.

இதற்கிடையே ஜோசப், வேதாத்திரி நகரில் புதிதாக வீடு ஒன்றை கட்டி, கிரகப் பிரவேசம் செய்துள்ளார். புதிய வீட்டில் குடும்பத்துடன் தங்க வேண்டும் என்பது ஐதீகம் என்பதால் கடந்த சில நாட்களாக தனது குடும்பத்தினருடன் புதிய வீட்டில் தங்கி வருகிறார். நேற்று இரவு பணியை முடித்து பட்டறையை  பூட்டிவிட்டு ஜோசப் புதிய வீட்டிற்கு சென்றிருக்கிறார். வழக்கம் போல இன்று காலை கடையை திறக்க வந்த போது கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பட்டறைக்குள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த, 950 கிராம் தங்க நகைகள், கால் கிலோ (250 கிராம்) வெள்ளிப் பொருட்கள், ரூ.1.5 லட்ச ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. கொள்ளைப் போன தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் உள்ளிட்டவைகளின் மொத்த மதிப்பு 30 லட்ச ரூபாய் என்று கூறப்படுகிறது.

Also  see... தன்பாலின திருமணம் குறித்து நாடாளுமன்றமே முடிவெடுக்க வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

தகவலறிந்த மாநகர துணை ஆணையர் அன்பு, ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் நிவேதிதா லட்சுமி மற்றும் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து ஜோசப் கொடுத்த புகாரின் பேரில், கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், சம்பவ இடத்தில் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், பழைய குற்றவாளிகள் இருவரை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Jewels, Trichy