ஹோம் /திருச்சி /

களைகட்டும் தீபாவளி ஷாப்பிங்... திருச்சி என்.எஸ்.பி ரோட்டுல நிக்க கூட இடமில்ல...

களைகட்டும் தீபாவளி ஷாப்பிங்... திருச்சி என்.எஸ்.பி ரோட்டுல நிக்க கூட இடமில்ல...

திருச்சி

திருச்சி என்.எஸ்.பி சாலையில் அலைமோதும் கூட்டம்

Diwali Shopping | தீபாவளி பண்டிகை நெருங்கும்  வேளையில் திருச்சி சத்திரப் பேருந்து நிலையம் அருகே உள்ள என்.எஸ்.பி ரோடு கம்மாளர் தெரு மலைக்கோட்டை வீதி களைகட்ட தொடங்கிவிட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சின்னக்கடை தெரு, பெரியகடை வீதி, என்.எஸ்.பி ரோட்டில் கிடைக்காத விஷயங்களே கிடையாது.

இங்கு தங்கம், வைரம், வெள்ளி, பித்தளை பாத்திரங்கள், பிளாஸ்டிக் சாமான்கள், ஆடைகள், பிற ஜவுளி ரகங்கள், மருந்துகள், இதர மளிகை காய்கறி, கனி வகைகள், சாப்பாடு, டிபன், காஃபி, கூல்டிரிங்ஸ், ஐஸ்க்ரீம், பாய், படுக்கை, தலையணை, மெத்தை, ஃபர்னிச்சர் சாமான்கள் என லிஸ்ட் போட முடியாத அளவுக்கு அனைத்து வகையான பொருட்களும் இங்கு கிடைக்கும்.

குடும்பத்திற்கு வேண்டிய அனைத்துப்பொருட்களும் மொத்தமாகவும், சில்லரையாகவும் கிடைக்கும் வணிக வளாகங்கள் அனைத்தும் நிறைந்த பகுதியாக விளங்குகிறது.

இதையும் படிங்க : மனநோய் குணமாக பக்தர்கள் தேடி செல்லும் குணசீலம் வெங்கடாஜலபதி கோவில்...

தீபாவளி நெருங்கி வரும் வேளையில் திருச்சி மாவட்டமல்லாது அருகாமையில் இருக்க மாவட்டமும் நம்ம திருச்சியை நோக்கி தீபாவளி பர்சேஸ்க்கு படை எடுத்து வர தொடங்கிட்டாங்க!

இதனால் என்.எஸ்.பி ரோடு முழுவதும் துணிக்கடைகளில் தீபாவளி விற்பனை சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.

வியாபாரிகள் மகிழ்ச்சி :

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், “தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு வியாபாரம் பெரிதாக ஒன்று நடக்கவில்லை. தற்பொழுது கடையிலும் கூட்டம் அதிகரித்துவிட்டது. மேலும் ஆன்லைன் வியாபாரம் தலை தூக்கி உள்ளதால் எங்களுக்கு போதிய விற்பனை இல்லை. இதனால் தரை கடை மற்றும் சில்லறை கடைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இருப்பினும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு விற்பனை ஓரளவுக்கு மனதிற்கு திருப்தியை தரும்” என்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthi K
First published:

Tags: Local News, Trichy