ஹோம் /திருச்சி /

திருச்சி மக்களே. நாளை மின் தடை அறிவிப்பு.. உங்க ஊர் இருக்கானு தெரிஞ்சுக்கோங்க!

திருச்சி மக்களே. நாளை மின் தடை அறிவிப்பு.. உங்க ஊர் இருக்கானு தெரிஞ்சுக்கோங்க!

மின் தடை

மின் தடை

Trichy powercut | பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

திருச்சி மாவட்டத்தில் நகரியம் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை ( வியாழக் கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கீழ்கண்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க | மாநகரை விட புறநகரில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்.. திருச்சி மக்கள் அச்சம்! தரவுகள் கூறுவது என்ன?

காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை குறைந்த திறனுள்ள கம்பிகளை மாற்றி அதிக திறனுள்ள கம்பிகளாக மாற்றும் பணி நடைபெற உள்ளதால்,மின் தடை ஏற்படும் என்று திருச்சி தென்னூர் நகரியம் இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

மின் தடை ஏற்படும் இடங்கள்:

தில்லைநகர் பிரிவுக்குட்பட்ட தில்லைநகர் வடகிழக்கு விஸ்தரிப்புகளான தில்லைநகர் 1 முதல் 5-வது குறுக்கு, தில்லைநகர் மேற்கு 1 மற்றும் 2 வது குறுக்கு, தேவர் காலனி, அண்ணாமலைநகர், கரூர்பைபாஸ்ரோடு மற்றும் சுற்றுவட்ட பகுதிகள்.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Trichy