முகப்பு /திருச்சி /

ஸ்ரீரங்கம் வட்டத்திற்கு உட்பட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திருச்சி ஆட்சியர்..

ஸ்ரீரங்கம் வட்டத்திற்கு உட்பட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திருச்சி ஆட்சியர்..

X
திருச்சி

திருச்சி கலெக்டர்

Trichy District Collector : ஸ்ரீரங்கம் வட்டத்திற்கு உட்பட்ட மக்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில்

ஸ்ரீரங்கம் வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்கள் ஆகியோர்கள் கலந்துகொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (29.04.2023 - சனிக்கிழமை) காலை 10:30 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஸ்ரீரங்கம் வட்டத்திற்குட்பட்ட எரிவாயு நுகர்வோர்கள் தங்களது குறைகளை பதிவு செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஸ்ரீரங்கம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் ஸ்ரீரங்கம் வட்டத்திற்கு உட்பட்ட எரிவாயு நுகர்வோர்கள், அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு எரிவாயு உருளை விநியோகம் தொடர்பான குறைபாடுகளை தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Trichy