ஹோம் /திருச்சி /

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின் தடை அறிவிப்பு!

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின் தடை அறிவிப்பு!

திருச்சியில் மின் தடை ஏற்படும் பகுதிகள்

திருச்சியில் மின் தடை ஏற்படும் பகுதிகள்

திருச்சி  மாவட்டம்  கே.சாத்தனூர்,   வேங்கை மண்டலம்   துணை மின் நிலையங்களில் நாளை (28-ம் தேதி)  (புதன் கிழமை)   மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் கே.சாத்தனூர், வேங்கை மண்டலம் துணை மின் நிலையங்களில் நாளை (28-ம் தேதி) (புதன் கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

திருச்சி மாவட்டம் கே.சாத்தனூர், வேங்கை மண்டலம் துணை மின் நிலையங்களில் நாளை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகாரமாக நாளை மின் தடை என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

மேலும், மின் தடை செய்யப்படும் பகுதிகளில் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் மின் தடை செய்யப்படும்:

கே.சாத்தனூர், கே.கே.நகர், இந்தியன் பேங்க் காலனி, காஜாமலைகாலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ.காலனி, கிருஷ்ணமூர்த்திநகர், சுந்தர்நகர், அய்யப்பநகர்,

எல்.ஐ.சி.காலனி, பழனிநகர், முல்லைநகர், ஓலையூர், இச்சிகாமலைப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோகாலனி, ஆர்.வி.எஸ்.நகர், வயர்லெஸ்ரோடு, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதிநகர், காமராஜ்நகர், ஜே.கே.நகர், சந்தோஷ்நகர், ஆனந்த்நகர், வடுகப்பட்டி, பாரிநகர், காஜாநகர் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக திருச்சி கிழக்கு இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்க: திருச்சியின் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட், சிறந்த பொழுதுபோக்கு இடம் இப்ராஹிம் பூங்கா - அழகும் சிறப்பும்!

இதேபோல் வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை சிறுகாம்பூர் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட மூவானூர், வேங்கை மண்டலம், தண்ணீர்பந்தல், மேலக்கண்ணுக்குளம், கீழக்கண்ணுக்குளம், பார்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூர், வேப்பந்துறை, சோழங்கநல்லூர், செந்தாமரைக்கண், சிறுகாம்பூர், நெ.2 காரியமாணிக்கம், சென்னகரை, ராமகிரிப்பட்டி, செங்குடி, வாழ்மால்பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியநல்லூர், வாத்தலை, வி.மணியம்பட்டி, சிலையாத்தி, துடையூர், பாண்டியபுரம், சுனைப்புகநல்லூர், ஈச்சம்பட்டி, மண்ணச்சநல்லூர் மேற்கு ஆகிய இடங்களில் மின் தடை இருக்கும்.

மேலும் டவுன் ஆகிய பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட இடங்களான மூவராயம்பாளையம், கவுண்டம்பட்டி, குருவிக்காரன்குளம், காட்டுக்குளம், தீராம்பாளையம், தில்லாம்பட்டி, பழையூர், செங்குழிப்பட்டி, உடையாம்பட்டி, திருப்பைஞ்சீலி, திருவரங்கப்பட்டி, பெரமங்கலம், சத்திரப்பட்டி, மாயாண்டிக்கோட்டம், காளவாய்ப்பட்டி, பூனாம்பாளையம், திருவெள்ளறை, ராசாம்பாளையம், சாலக்காடு, புலிவலம் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட இடங்களான புலிவலம், மண்பறை, சந்தனப்பட்டி, டி.புதுப்பட்டி, பழம்புதூர், திருத்தலையூர், நல்லயம்பட்டி ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை ஸ்ரீரங்கம் இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Local News, Power cut, Trichy