Home /trichy /

திருச்சியில் வடமாநிலத்தவர் தயாரிக்கும் டோலக்.. அரிஸ்டோ மேம்பால பகுதியில் விற்பனை ஜோர்..

திருச்சியில் வடமாநிலத்தவர் தயாரிக்கும் டோலக்.. அரிஸ்டோ மேம்பால பகுதியில் விற்பனை ஜோர்..

திருச்சியில்

திருச்சியில் வடமாநிலத்தவர் தயாரிக்கும் டோலக்..

Trichy Aristo Flyover | திருச்சியில் அரிஸ்டோ மேம்பாலம் அருகில், உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மூவர் டோலக் எனப்படும் மேளத்தை அங்கேயே தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
திருச்சி மாவட்டத்தில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் கூலித்தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்த நிலையில் தற்போது பலரும் சுய தொழில் செய்ய தொடங்கியுள்ளதை பார்க்க  முடிகிறது. சாலையோரங்களில் துணிகள், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள், ஹெல்மெட் விற்பனை உள்ளிட்டவற்றை செய்து கொண்டிருக்கிறார்கள்.  இதில் குறிப்பாக திருச்சியில் அரிஸ்டோ மேம்பாலம் அருகில், உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மூவர் டோலக் எனப்படும் மேளத்தை அங்கேயே தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள்.

இது தொடர்பாக அவர்களிடம் பேசிய போது, “நாங்கள் பல்வேறு தொழில்கள் செய்து வருகிறோம்.  தஞ்சாவூர், திருச்சி, கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் நாங்கள் எங்களது தொழிலை செய்து வருகிறோம். ஊர் ஊராகச் சென்று எங்களது வியாபாரத்தை செய்து வருகிறோம் .

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

திருச்சியில் எங்களது தொழிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திருச்சி நகரம் மிகவும் அழகான நகரம் திருச்சி காவல்துறையை பொறுத்தவரை எங்களுக்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லை என கூறினார். அரிஸ்டோ மேம்பாலம் பகுதியில் கடந்த சில நாட்களாக டோலக் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்..

டோலக் சிறிய ட்ரம் ரூ. 150-க்கும், பெரிய வகை ட்ரம் 250 ரூபாய்க்கும்  நாங்கள் விற்பனை செய்து வருகிறோம் என கூறியுள்ளார். இவர்களிடம் டோலக் வாங்க விரும்பினால் அரிஸ்டோ மேம்பால பகுதிக்கு ஒரு விசிட் அடிக்கலாம்..
Published by:Arun
First published:

Tags: Local News, Trichy

அடுத்த செய்தி