ஹோம் /Trichy /

Trichy : திருச்சியில் 3 நாட்களுக்கு குடிநீர் சப்ளை நிறுத்தம்.. எங்கெல்லாம் தெரியுமா?

Trichy : திருச்சியில் 3 நாட்களுக்கு குடிநீர் சப்ளை நிறுத்தம்.. எங்கெல்லாம் தெரியுமா?

திருச்சி

திருச்சி

Trichy District: திருச்சி மாவட்டத்தில் காட்டூர் மற்றும் திருவெறும்பூர் பகுதிகளில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று முதல் வரும் 20 தேதி வரை  குடிநீர் விநியோகம் இருக்காது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட புதிய வார்டு எண் 38, 39, 40, 41, 42 மற்றும் 43க்கு உட்பட்ட காட்டூர், திருவெறும்பூர் பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் திருவெறும்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்படுகிறது.

  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கொள்ளிடம் ஆற்றில் உள்ள நீர் சேகரிப்பு கிணற்றில் உள்ள குழாய்கள் பழுதடைந்து உள்ளதால் பழுதுகளை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

  தரைமட்ட தொட்டிகள் மராமத்து பணி நடைபெற உள்ளது.அதனால் திருவெறும்பூர் ஒன்றிய காலனி, வள்ளுவர் நகர், கைலாஷ் நகர், விக்னேஷ் நகர், வைத்தியலிங்கம் நகர், கணேஷ் நகர், மஞ்சத்திடல், சக்தி நகர், ஸ்ரீ பாலாஜி நகர், கொக்கரசம்பேட்டை, எல்லக்குடி, ஆலத்தூர், கே.கே.கோட்டை, அக்ரஹாரம், காவேரி நகர், காந்தி நகர், பாத்திமாபுரம், முருகன் கோவில் தெரு, அழகு மாரியம்மன் கோவில் தெரு, பர்மா காலனி, வேணுகோபால் நகர், பாரதிதாசன் நகர், திருநகர் ஆகிய பகுதிகளுக்கு இன்று (18.6.2022) முதல் (20.062022)-ஆம் தேதி வரை குடிநீர் விநியோகம் இருக்காது.

  செய்தியாளர்- என் .மணிகண்டன்.

  Published by:Arun
  First published:

  Tags: Trichy