Home /trichy /

Trichy : நியூஸ் 18 உள்ளூர் செய்தி எதிரொலி.. திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலையில் கழிவறைகள் பளிச்..

Trichy : நியூஸ் 18 உள்ளூர் செய்தி எதிரொலி.. திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலையில் கழிவறைகள் பளிச்..

திருச்சி

திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலை

Trichy RaceCourse Road : நியூஸ் 18 செய்தி எதிரொலியாக திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலையில் பராமரிப்பின்றி கிடந்த கழிவறையை மாநகராட்சி அதிகாரிகள் சீரமைத்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli
 திருச்சியின் முக்கிய சாலையான ரேஸ்கோர்ஸ் பகுதியில்அண்ணா விளையாட்டு அரங்கம், சுற்றுள்ள பகுதிகளில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது .

ரேஸ் கோர்ஸ் சாலையில் அரசு அலுவலகங்கள் மற்றும் பல கல்லூரிகள் இயங்கி வருகின்றன. மேலும் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், சிறுவர்களுக்கான திறந்தவெளி விளையாட்டு பூங்கா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது .

இங்கு காலை மற்றும் மாலை வேளையில் நூற்றுக்கணக்கானோர் நடைபயிற்சி மேற்கொள்ண்டு வருகின்றனர். இவர்களுக்காக  மாநகராட்சி சார்பில் ஆண்கள் , பெண்கள் என தனித்தனியாக பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டது. அந்த கழிப்பிடமானது  முறையாக பராமரிக்கப்படாமல் குப்பை கூலங்களாகவும், செடி கொடிகள் வளர்ந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.

கழிவறை - முன்பு


மாநகராட்சியிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.



கழிப்பிடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் இரவு மற்றும் பகல் நேரங்களில் பயன்படுத்தும் விதமாக வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று நியூஸ் 18 உள்ளூர் தளத்தில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் பகுதியில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கழிவறை - தற்போது


உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Arun
First published:

Tags: Local News, Trichy

அடுத்த செய்தி