முகப்பு /திருச்சி /

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இவ்வளவு வசதிகளா..! என்னென்ன தெரியுமா..?

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இவ்வளவு வசதிகளா..! என்னென்ன தெரியுமா..?

X
சமயபுரம்

சமயபுரம் மாரியம்மன் கோயில்

Samayapuram Mariyamman Kovil | திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய புதிய வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்காக புதிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள அம்மன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயில். இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பக்தர்கள் வெயிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.

இதனையறிந்த கோயில் நிர்வாகமும், அரசும் பக்தர்களின் வசதிக்காக கோயில் நிதியிலிருந்து ரூ.13.80 கோடி மதிப்பில் பல்வேறு வசதிகளுடன் கூடிய பக்தர்கள் இருக்கையில் காத்திருந்து வரிசையில் தரிசனம் செய்ய வரிசை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

சமயபுரம் மாரியம்மன் கோயில்

என்னென்ன வசதிகள் உள்ளன?

கட்டண வரிசை மற்றும் பொது தரிசனத்திற்கு தனித்தனி நுழைவு மண்டபங்கள், காத்திருப்பு கூடம், பக்தர்கள் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகள், திருக்கோயில் பயன்பாட்டிற்கான 8 தேங்காய் பழக்கடைகள், பிரசாத விற்பனை நிலையம், கட்டண சீட்டு விற்பனை மையம், புத்தக மையம், மின்விசிறிகள், மின்விளக்குகள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, ஆண்கள் பெண்களுக்கான 12 கழிவறைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Trichy