Home /trichy /

விரைவில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம்.. எங்கு? எப்போது?

விரைவில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம்.. எங்கு? எப்போது?

ஸ்ரீரங்கத்தில்

ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம்.

Trichy Srirangam | விரைவில்புதிய பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளதால் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதி வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதிய பேருந்து நிலையம் கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

இக்கோவிலுக்கு வருவோரின் கார்கள் மற்றும் பஸ்களை நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லை. மேலும் வழிநெடுகிலும் சாலைகளில் பஸ்களை நிறுத்தி விடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஸ்ரீரங்கத்தில்  பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழக பட்ஜெட்டிலும் ஸ்ரீரங்கம் புதிய பஸ் நிலையம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் புதிய பேருந்து நிலையத்துக்கு இடம் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. நீண்ட நாள் கோரிக்கையான ஸ்ரீரங்கம் பேருந்து நிலைய பிரச்னைக்கு தற்போது விடிவு காலம் பிறந்து இருக்கிறது.

கடந்த செப் 1 ஆம் தேதி தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையாளர் வைத்தியநாதன் ஆகியோர் ஸ்ரீரங்கம் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகாமையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பழைய கிளப் இடத்தை பார்வையிட்டனர். சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள அந்த இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

புதிய பேருந்து நிலையம் கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திட்ட மதிப்பீடு முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படும். சுமார் ரூ.25 கோடி ரூபாய் அளவுக்கு திட்ட மதிப்பீடு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய பேருந்து நிலையத்தில் டவுன் பஸ்கள் வந்து செல்ல வசதி செய்யப்படும்.
Published by:Arun
First published:

Tags: Local News, Srirangam, Trichy

அடுத்த செய்தி