Home /trichy /

திருச்சியில் அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா - முழு விவரம்

திருச்சியில் அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா - முழு விவரம்

திருச்சி

திருச்சி

Trichy Navarathri | திருச்சியில் உள்ள அம்மன் கோவில்களில் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அது குறித்த விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
மக்களை துன்புறுத்தி வந்த மகிஷாசுரன் என்ற அரக்கனுடன், சக்தியின் வடிவான மகிஷாசுரமர்த்தினி 9 நாட்கள் போரிட்டு 10வது நாளில் அவனை வதம் செய்து வெற்றிகொண்டதை நவராத்திரி விழாவாக கொண்டாடி வருகிறோம்.

நவராத்திரி விழாவின் முதல் 3 நாட்கள் தேவியை துர்க்கையாகவும், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவியாகவும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியாகவும் கருதி வழிபடுகிறோம். இந்நிலையில், திருச்சியில் உள்ள அம்மன் கோவில்களில் 10 நாட்களும் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

இதையும் படிங்க  ; திருச்சி வேங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா 26ம் தேதி துவக்கம்

சமயபும் மாரியம்மன்

அதன்படி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் செப்.26ம் தேதி குமாரிகா அலங்காரத்திலும், 27ம் தேதி திரிமூர்த்தி அலங்காரத்திலும், 28ம் தேதி கல்யாணி அலங்காரத்திலும் (துர்க்கை அம்சம்) எழுந்தருளுகிறார்.

29ம் தேதி ரோகினி அலங்காரத்திலும் 30ம் தேதி காளகா அலங்காரத்திலும், அக்டோபர் மாதம் 1ம் தேதி சண்டிகா அலங்காரத்திலும் (மகாலட்சுமி அம்சம்) எழுந்தருளுகிறார். அக்டோபர் 2ம் தேதி ஸாம்பவி, துர்கா அலங்காரத்திலும், 8ம் நாள் விழாவான 3ம் தேதி சுபத்ரா அலங்காரத்திலும் (சரஸ்வதி அம்சம்) அம்மன் அருள்பாலிக்கிறார்.

அக்டோபர் 4ம் தேதி விஜயதசமியன்று அம்மன் வேடுபரி அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். அன்று இரவு அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வன்னி மரம் சென்றடைகிறார். அதைத்தொடர்ந்து அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாள் இரவும் நாட்டியம் மற்றும் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில், தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் வரும் 26ம் தேதி (திங்கட்கிழமை) நவராத்திரி விழா தொடங்குகிறது. அன்று முதல் 5ம் தேதி வரை நவராத்திரி விழா நடைபெறுகிறது.

இதையும் படிங்க ; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் சேவை நேரம் அறிவிப்பு

உறையூர் வெக்காளியம்மன்

உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் 25ம் தேதி (ஞாயிற்றுகிழமை) நவராத்திரி விழா தொடங்குகிறது. இதையொட்டி தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அடுத்த மாதம் 5ம் தேதி (புதன்கிழமை) இரவு அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல் திருச்சி கருமண்டபம் வசந்தநகர் ஜெயநகர் வெற்றி விநாயகர் கோவிலில் 26ம் தேதி முதல் அடுத்த மாதம் 6ம் தேதி வரை நவராத்திரி விழா நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Karthi K
First published:

Tags: Local News, Trichy

அடுத்த செய்தி