ஹோம் /திருச்சி /

திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலையில் காட்சிப்பொருளாக இருக்கும் ”நம்ம டாய்லெட்”

திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலையில் காட்சிப்பொருளாக இருக்கும் ”நம்ம டாய்லெட்”

X
காட்சிப்பொருளான

காட்சிப்பொருளான “நம்ம டாய்லெட்”

Trichy District News : திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலையில் காட்சி பொருளாக இருக்கும் ”நம்ம டாய்லெட்”

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சியின் முக்கிய சாலைகளுள் ஒன்று ரேஸ்கோர்ஸ் சாலை. இங்கு அண்ணா விளையாட்டு அரங்கம், அரசு அலுவலகங்கள் மற்றும் பல கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

நடைபயிற்சிக்காக நடைபாதைகள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா ஆகியவை இருக்கிறது. இதில் காலை மற்றும் மாலை வேளையில் நூற்றுக்கணக்கானோர் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வார்கள்.

இவர்களுக்கு இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக திருச்சி மாநகராட்சி சார்பில் “நம்ம டாய்லெட்” என்ற பெயரில் பொதுக்கழிப்பறை அமைக்கப்பட்டது.ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியே கழிப்பறைகள் கட்டப்பட்டன.

இதையும் படிங்க : திருச்சியில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள்..

கட்டி முடிக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமால் காட்சி பொருளாகவே இருக்கிறது இந்த கழிப்பறைகள்.இதனால் அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வோர், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

திறந்தவெளிகளை ஆண்கள் மற்றும் குழந்தைகள் உபயோகிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் எழுந்துள்ளது. எனவே கட்டிமுடிக்கப்பட்ட இந்த கழிப்பறைகளை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை வைக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Trichy