ஹோம் /திருச்சி /

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்... அபராதம் விதித்தும் பயனில்லை என திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் புலம்பல்...

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்... அபராதம் விதித்தும் பயனில்லை என திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் புலம்பல்...

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

Trichy | கால்நடைகளின் உரிமையாளர்கள் அதனை அபராதம் செலுத்தி மீட்டுச் செல்லாமல் தினமும் காலை வந்து அது நன்றாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு மட்டுமே செல்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாநகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக, பிரதான சாலைகள், வீதிகள் மற்றும் பொது இடங்களில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் காளை மாடுகளும் சுற்றித்திரிந்து பயமுறுத்துகின்றன.

இதுகுறித்த புகார்கள் அதிகரித்த நிலையில், சாலையில் சுற்றுத்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரு மாட்டிற்கு ரூ.5000, கன்றுகளுக்கு அளவுக்கு ஏற்ற வகையில் ரூ.1000 முதல் ரூ.2,500 வரையில் அபராதம் விதிக்கப்படுகின்றன. ஆனால் இந்த அபராத விதிப்பு நடவடிக்கையால் எந்த பயனும் இல்லை என அதிகாரிகள் புலம்புகின்றனர்.

கால்நடைகளை பிடித்து அதனை லாரியில் ஏற்றி பின்பு அதை பாதுகாப்பாக ஒரு வளாகத்தில் அடைப்பது, அதற்கு உணவு கொடுப்பது உள்ளிட்ட நடைமுறை சிக்கல்கள் பலவற்றை சந்திப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கால்நடைகள் அடைத்து வைத்துள்ள இடத்திலும் திருட்டு போகாமல் தடுக்கும் வகையில் காவலர்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : திருச்சி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பாடு எப்படி உள்ளது?

கால்நடைகளின் உரிமையாளர்கள் அதனை அபராதம் செலுத்தி மீட்டுச் செல்லாமல் தினமும் காலை வந்து அது நன்றாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு மட்டுமே செல்கின்றனர். இதனால் மாநகராட்சிக்கு கால்நடைகளை பராமரிக்கும் செலவு அதிகமாகிறது.

செப்டம்பர், அக்டோபர் இரு மாதங்களில் திருச்சி மாநகரில் சாலைகளில் திரிந்த வகையில் சுமார் 120 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. முதியோர், ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்டோர் வளர்க்கும் கால்நடைகளுக்கு அபராத தொகையில் தளர்வும் உள்ளது. அனைவருக்கும் ஒரே அபராதம் விதித்தால் சாலைகளில் திரியும் கால்நடைகளை ஓரளவு கட்டுப்படுத்தலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே, கால்நடைகளை சாலையில் விட்டு விடும் உரிமையாளர்களுக்கு இனி கடுமையான அபராத தொகை வசூலிக்கப்படும் என அதிகாரிகள் மீண்டும் எச்சரித்துள்ளனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Trichy